பனியில் உறைந்தது அமெரிக்கா: குளிருக்கு 9 பேர் பலி

Image Unavailable

 

நியூயார்க், ஜன.9 - கடந்த வாரம் அமெரிக்காவின் வடகிழக்கு மாகாணங்களில் கடுமையான பனி கொட்டியது. சுமார் 2 அடி உயரத்துக்கு கொட்டிய பனியால் மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உறைபனி கொட்டியது. இந்நிலையில் தற்போது துருவ பகுதியில் நிலவுவது போன்று உறைபனி பொழிவு ஏற்பட்டுள்ளது. அதாவது மத்திய கிழக்கு அமெரிக்கா முதல் தெற்கு அமெரிக்கா வரையிலும், மேற்கு பகுதியிலும் இந்த துருவ பனி சுழல் காற்று வீசுகிறது. இதனால் மழை போன்று பனி கொட்டிக் கொண்டே இருக்கிறது. இதனால் அமெரிக்காவில் தட்ப வெப்ப நிலை குறைந்து கொண்டே செல்கிறது.  மின்னசோட்டாவில் மைனஸ் 37 டிகிரியாக தட்ப வெப்ப நிலை குறைந்தது. ஒக்லஹோமா, டெக்காஸ் பகுதிகளில் கடும் குளிர் காற்று வீசுகிறது. அங்கு மைனஸ் 40 டிகிரி செலிசியஸ் ஆக தட்ப வெப்ப நிலை குறைந்துள்ளது.  நியூயார்க் நகரம் பனியால் உறைந்துவிட்டது. வரலாறு காணாத வகையில் மைனஸ் 16 டிகிரி ஆக குறைந்தது. மணிக்கு 51 கி.மீ. வேகத்தில் குளிர் காற்று வீசுகிறது. ரோடுகளில் பனி உறைந்து கிடப்பதால் மற்றும் ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. நேற்று முன்தினம் 1800 விமானங்களின் போக்கு வரத்து ரத்து செய்யப்பட்டது. அமெரிக்காவில் கடும் உறைபனிக்கு ஏற்கனவே பலர் பலியாகி விட்டனர். இந்நிலையில் தற்போது உருவாகி இருக்கும் துருவ பனி சுழல் காற்றுக்கு இதுவரை 9 பேர் இறந்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ