முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இருசக்கர வாகன ஓட்டுபவர்கள் தலைகவசம் அணிய உத்தரவு

ஞாயிற்றுக்கிழமை, 22 மே 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மே.22 -​வருகிற 28-ந் தேதி முதல் இருசக்கர வாகன ஓட்டுபவர்கள் தலைகவசம் அணியவேண்டும் என்று போக்குவரத்து போலீசார் உத்தரவிட்டுள்ளனர். இது குறித்து போக்குவரத்து போலீசார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணியாமல் செல்லும்போது ஏற்படும் விபத்துக்களினால் அதிக அளவில் உயிரிழப்புகள் ஏற்படுகிறது.

இருசக்கர வாகன ஓட்டிகள் பாதுகாப்பு கருதி தலைக்கவசம் கட்டாயமாக அணிய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அதேபோல் வாகனங்களின் வாகன பதிவு எண் பலகைகள் மோட்டார் வாகனச் சட்டம் மற்றும் விதிகளின்படிதான் பொருத்தப்பட வேண்டும். இப்பலகைகளில் வேறு சித்திரங்களோ அல்லது எழுத்துக்களோ விதிமுறைக்கு புறம்பாக எழுதப்படக்கூடாது.

வருகின்ற 28.5.2011-ந் தேதி முதல் தலைக்கவசம் அணியாத இருசக்கர வாகன ஓட்டிகள் மீதும் மற்றும் விதிமுறைகளுக்கு புறம்பாக உள்ள வகான பதிவு எண் பலகை உள்ள அனைத்து வாகனங்கள் மீதும் மோட்டார் வாகனச் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே இருசக்கர வாகன ஓட்டிகள் தங்கள் சொந்த பாதுகாப்பு கருதி வருகின்ற 28.5.2011 முதல் தலைக்கவசம் அணிந்தும், அனைத்து வாகன ஓட்டிகளும் பதிவு எண் பலகைகளை முறைப்படுத்தியும் போக்குவரத்து காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago