என் மீதான குற்றச்சாட்டுகள் தவறானவை: தேவயானி

Image Unavailable

 

வாஷிங்டன், ஜன - 11- அமெரிக்க விசா மோசடியில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இந்திய துணைத் தூதர் தேவயானி இன்று இந்தியா திரும்புகிறார். 

நாடு திரும்பும் முன் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்: "என் மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை. எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாத குற்றச்சாட்டு இது. நான் நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிச்சயம் நிரூபிப்பேன்" என்றார். 

மேலும் அவர் கூறுகையில்: "மிகவும் மோசமான சூழலில் நான் சிக்கிக் கொண்ட போது எனக்கு உதவிய அமைச்சர்கள், வெளியுறவு அமைச்சக நண்பர்கள், அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், மற்றும் என் தேச மக்கள் அனைவருக்கும் எனது நன்றியை உரித்தாக்குகிறேன். இந்திய அரசாங்கமும், நானும் எடுத்துள்ள நிலைபாடு சரியானது என நிரூபிக்கப்படும்" என தெரிவித்தார். 

தேவயானி கோப்ரகடே மீது விசா மோசடி, நீதிபதியிடம் தவறான வாக்குமூலங்களை அளித்தது என இரண்டு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ