ஜப்பானில் ரசாயன ஆலை வெடி விபத்தில் 5 பேர் பலி

Image Unavailable

 

டோக்கியோ, ஜன. 11 - ஜப்பானில் உள்ள ரசாயன ஆலையில் நேற்று முன் தினம் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 5 பேர் உடல் கருகி பலியாயினர். 

ஜப்பானில் மத்திய பகுதியில் யோகாய்ச்சி என்ற இடத்தில் மிட்சுபிசி நிறுவனத்திற்கு சொந்தமான சிலிகான் பொருட்கள் உற்பத்தி செய்யும் ரசாயன ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. 

இந்த ஆலையில் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு தொழிலாளர்கள் வழக்கமான பணிகளில் ஈடுபட்டிருந்தனர். 

அங்கிருக்கும் ஆய்வகத்தில் ரசாயன கலவையை கலக்கும் பணியில் நிபுணர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக ரசாயனங்கள் ஒன்றுடன் ஒன்று கலந்து திடீரென தீ விபத்து ஏற்பட்டது. 

இதில் ஆலையின் ஒரு பகுதி பயங்கர வெடி சத்தத்துடன்  வெடித்து தீ பிடித்து எரியத் தொடங்கியது. உடனடியாக தீ அணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். 

இதில் தீயில் கருகி ஊழியர்கள் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். மேலும் 17 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் 

இதே போல கடந்த 2012 _ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே இடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பலர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் ஜப்பா னில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ