முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய அரசு இன்று 3-வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது

ஞாயிற்றுக்கிழமை, 22 மே 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,மே.21 - பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இன்று 3-வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. கடந்த லோக்சபையின்போது ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது. மன்மோகன் சிங் மீண்டும் பிரதமராக பொறுப்பு ஏற்றார். பதவி ஏற்று இரண்டு ஆண்டுகள் முடிந்ததுதான் மிச்சம். பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி உள்ளது. ரூ. 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், ஆயிரக்கணக்கான கோடி காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஊழல், ஆதர்ஷ் ஊழல். இப்படி பல்வேறு இமாலாயா ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளது. மேலும் இந்த இரண்டு ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி திட்டங்கள் மற்றும் பொருளாதார திட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை. இந்தநிலையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசானது பதவி ஏற்று இரண்டுகள் நேற்றுடன் முடிவடைந்தது. இன்று 3-வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. முதன் முதலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி கடந்த 2004-ம் ஆண்டு ஆட்சியை பிடித்தது. அப்போது பிரதமர் பதவியை ஏற்க சோனியா காந்தி மறுத்துவிட்டதால் மன்மோகன் சிங் பிரதமர் பொறுப்பை ஏற்றார். அதனையடுத்து கடந்த 2009-ம் ஆண்டு நடைபெற்ற லோக்சபை தேர்தலிலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியை பிடித்தது. ஆனால் கடந்த 8 மாதங்களாக மன்மோகன் சிங் அரசு மீது அடுத்தடுத்து குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்றன. நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தலில் அசாம் மற்றும் கேரளாவில் ஆட்சியை பிடித்திருப்பது காங்கிரசுக்கு சற்று ஆறுதலாக உள்ளது. மேற்குவங்காளத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டதால் காங்கிரசுக்கு 50 தொகுதிகள் வரை கிடைத்தது. ஆனால் தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் சேர்ந்து போட்டியிட்டதால் எப்போதும் மீள முடியாத அளவுக்கு தி.மு.க.வுக்கும் காங்கிரசுக்கும் படுதோல்வி ஏற்பட்டது. இந்த தோல்வி அந்த கட்சிகளுக்கு நிரந்தரமாக இருந்தாலும் இருக்கலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago