முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜீவ் காந்தி நினைவிடத்தில் ஜனாதிபதி-பிரதமர் அஞ்சலி

ஞாயிற்றுக்கிழமை, 22 மே 2011      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி,மே.22 - முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 20 வது நினைவு தினத்தை முன்னிட்டு டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் மலரஞ்சலி செலுத்தினார்கள். 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி, தமிழ்நாட்டுக்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய வந்திருந்த போது ஸ்ரீபெரும்புதூரில் 1991 ம் ஆண்டு மே மாதம் 21 ம் தேதியன்று பெண் மனித வெடிகுண்டுக்கு பலியானார். அன்று முதல் இன்று வரை மே 21 ம் தேதி தீவிரவாத எதிர்ப்பு தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று முன்தினம் சென்னை கோட்டையில் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழியினை ஏற்றுக் கொண்டார். நேற்று சனிக்கிழமை ஆதலால் நேற்று முன்தினமே அவர் இந்த உறுதிமொழியை ஏற்றுக் கொண்டார். அமைச்சர்களும் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர். 

இந்த நிலையில் டெல்லியில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடமான வீரபூமியில் அவரது 20 வது நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று தலைவர்கள் மலரஞ்சலி செலுத்தினார்கள். இதே போல் நாடு முழுவதும் அவருக்கு பல்வேறு இடங்களில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது. டெல்லியில் உள்ள வீரபூமியில் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் ராஜீவின் துணைவியாரும் காங்கிரஸ் தலைவருமான சோனியா காந்தி ஆகியோர் முதலில் வந்து அவரது நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினார்கள். 

பின்னர் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், டெல்லி முதல்வர் ஷீலாதீட்சித் ஆகியோரும் ராஜீவ் காந்திக்கு மலரஞ்சலி செலுத்தினார்கள். 

ராஜீவின் மகன் ராகுல் காந்தி, மகள் பிரியங்கா, அவரது கணவர் ராபர்ட் வதேரா ஆகியோரும் ராஜீவ் நினைவிடத்தில் நேற்று மலரஞ்சலி செலுத்தினார்கள். ராஜீவ் நினைவிடத்தில் தேசிய கொடிகளை பிடித்தபடி பள்ளி மாணவ, மாணவிகளும் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இதே போல் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ராஜீவ் காந்தியின் 20 வது நினைவு தினம் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்