முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தான் அட்டர்னி ஜெனரல் முனீர் மாலிக் திடீர் ராஜினாமா

சனிக்கிழமை, 11 ஜனவரி 2014      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத், ஜன. 12 - பாகிஸ்தானின் அட்டர்னி ஜெனரல் முனீர் மாலிக் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். 

கடந்த ஆண்டு ஜூலை மாதம் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்டு முனீர் மாலிக் அட்டர்னி ஜெனரலாக நியமிக்கப்பட்டிருந்தார். 

கடந்த 3 நாட்களுக்கு முன்பு பிரதமர் நவாஸ் ஷெரீப்பை அவரது அலுவலகத்தில் சந்தித்த முனீர் மாலிக் ஜனவரி 10 முதல் பதவியில் இருந்து விலகி கொள்வதாக தெரிவித்தார். 

அவரது ராஜினாமாவை உடனடியாக நவாஸ் ஷெரீப்பும் ஏற்றுக் கொண்டார். அதற்கு முன்னதாக தனது ராஜினாமா கடிதத்தை பாகிஸ்தான் அதிபர் மம்மூன் ஹூசைனுக்கு முனீர் மாலிக் அனுப்பினார். 

கடந்த 2007_ம் ஆண்டு பர்வேஸ் முஷாரப் ஆட்சியின் போது நீதிபதிகள் நீக்கப்பட்டதை கண்டித்தும், நீதித்துறை சுதந்திரத்திற்காகவும், பாகிஸ்தானின் வக்கீல்கள் சங்கத்தை ஒருங்கிணைத்து போராட்டம் நடத்தியவர் முனீர் மாலிக் என்பது குறிப்பிடத்தக்கது. 

தலைமை நீதிபதி நீக்கப்பட்டது தொடர்பான வழக்கில் சட்ட போராட்ட குழுவின் தலைவராகவும் முனீர் பொறுப்பு வகித்து வருகிறார். 

அதிபர் மம்மூன் ஹுசைனுக்கு முனீர் மாலிக் எழுதிய கடிதத்தில் தனது தாயின் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 

தற்போது பர்வேஸ் முஷாரப் மீதான தேச துரோக குற்றச்சாட்டு வழக்கு விசாரணை நடந்து வரும் வேளையில் அட்டர்னி ஜெனரல் முனீர் மாலிக் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்