தேவயானி வீட்டில் மிகவும் சிரமப்பட்டேன்: பணிப்பெண்

Image Unavailable

 

நியூயார்க், ஜன.12 - அமெரிக்காவில் தேவயானி வீட்டில் பணிபுரிந்தபோது நான் மிகவும் சிரமப்பட்டேன் என்று அவரது வீட்டு பணிப்பெண் சங்கீதா ரிச்சர்டு குறை கூறி யுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை மௌனம் காத்த சங்கீதா இதுபற்றி முதல்முறையாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெ ரிவித்துள்ளதாவது:

எனது குடும்பத்துக்குப் பணம் அனுப்புவ தற்காக சில ஆண்டுகள் வீட்டு வேலை பார்க்கலாம் என்ற நம்பிக்கையில் அமெரிக்காவுக்கு வரமுடிவு செய்தேன்.  ஆனால் இங்கு நிலைமை இவ்வளவு மோசமாகும் என்று நினைத்ததில்லை.  அதாவது தேவயானியின் வீட்டில் நான் ஏராளமான வேலைகளை செய்ய வேண்டியிருந்தது. இதனால் எனக்கு தூங்கு வதற்கோ, சாப்பிடுவதற்கோ, என் பணிகளைக் கவனிப்பதற்கோ கூட எனக்கு நேரம் இருந்ததில்லை. தேயானியின் வீட்டில் பணியாற்றியபோது, அவர்கள் என் னை நடத்தியவிதம்  காரணமாக இந்தியா வுக்கு திரும்பிவிட முயன்றேன். 

ஆனால் நான் இந்தியாவுக்குத் திரும்புவதற்கு அவர்கள் எனக்கு அனுமதி தரவிலலை. நான் அங்கு பட்ட வேதனையைப்போல் அமெரிக்காவில் பல்வேறு சிரமங்களை அனுபவிக்கும் மற்ற வீட்டு வேலைக்காரர்களுக்கும் ஒரு விஷயத்தைக் கூற விரும்புகிறேன். உங்களுக்கு என்று சில உரிமைகள் உள்ளன. உங்களைச் சுரண்ட  யாரையும் அனுமதிக்காதீர்கள் என்பதுதான் அது என்று அந்த அறிக் கையில் சங்கீதா தெரிவித்துள்ளார். 

அவருக்காக அமெரிக்க கோர்ட்டில் வாதாடி வரும் சேப் ஹாரிஸன் என்ற அமைப்பு இந்த அறிக்கையை சங்கீதா சார்பில் வெளியிட்டது. துணைத் தூதர் தேவயானி மீதான குற்றப் பதிவை அந்த அமைப்பு வரவேற்றுள்ளது.                  

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

இன்றைய தலைப்புச் செய்திகள் | Today's News Headlines 26.10.2021 காற்று மணியின் ஓசைகளை கேட்டு குஷியான நாய்...! முதலையை தோளில் போட்டு குத்தாட்டம் | சிலிர்க்க வைக்கும் வீடியோ வைரல்...!
பார்வையாளர்ளை வியப்பில் ஆழ்த்திய பாம்பு நடனம்...! ஆமையின் கண்ணீரை பருகும் வண்ணத்துப்பூச்சிகள்...! ஒரே நாளில் தலையில் உள்ள பேனை விரட்ட எளிய டிப்ஸ்| How To Get Rid Of Head Lice Completely,
நெற்றியில் ஒற்றை கண்ணுடன் பிறந்த ஆட்டுக்குட்டி...! இன்றைய தலைப்புச் செய்திகள் | Today's News Headlines 25.10.2021 இன்றைய தலைப்புச் செய்திகள் | Today's News Headlines 24.10.2021
ஹோம் வொர்க் பண்ணினா பூனைக்கு பிடிக்காது சிறுவனை டிஸ்டர்ப் செய்யும் வீடியோ வைரல்....! கீழே கிடக்கும் குப்பையை எடுத்து குப்பை தொட்டியில் போடும் யானை... Vaara Rasi Palan - 25.10.2021 to 31.10.2021 | Weekly rasi palan Tamil | வார ராசிபலன்