முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊழலுக்கு எதிராக 6 புதிய சட்டங்களை கொண்டு வர முயற்சி

ஞாயிற்றுக்கிழமை, 12 ஜனவரி 2014      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி, ஜன.12 - பாராளுமன்றத்தில் ஊழலுக்கு எதிராக 6 புதிய சட்டங்களை கொண்டு வருவதற்கு ராகுல்காந்தி முயற்சி மேற்கொண்டு வருகிறார்.  விரைவில் பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெற உள்ளது.  ஏற்கனவே நடைபெற்ற மாநில சட்ட சபை தேர்தலில் காங்கிஸ் கட்சிக்கு மக்கள் மரண அடி கொடுத்து விட்டார்கள். 

எனவே மத்தியில் ஆட்சியை தக்கவைக்க காங்கிரஸ் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மக்களுக்கு ஆண்டுக்கு 12 சிலிண்டர்களை வழங்குவது உள்பட பல அதிரடி திட்டங்களை காங்கிரஸ் அறிவிக்க உள்ளது. மேலும் பாராளுமன்றத்தில் ஊழலுக்கு எதிராக 6 புதிய சட்டங்களை கொண்டு வருவதற்கு ராகுல்காந்தி முயற்சி மேற்கொண்டு வருகிறார். டெல்லியில் ஆம்ஆத்மி கட்சி ஆட்சியை பிடித்துள்ளதால் காங்கிரஸ் கட்சிக்கு கவலை ஏற்பட்டுள்ளது. அங்கு காங்கிரஸ் 3_வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற பாராளுமந்ற கூட்டத்தில் ஜன்லோக்பால் மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது. அன்த மசோதா ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெற்று நடைமுறைக்கு வந்துள்ளது.மோடி பிரச்சாரம், ஆம் ஆத்மி கட்சி வளர்ச்சி ஆகியவை காங்கிரஸை சிந்திக்க  வைத்துள்ளது. இதை முறியடிக்க வேறு ஏதாவது செய்ய வேண்டும் என்று கருதிய காகிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, ஊழல் எதிர்ப்பு சட்டங்களைக்  கொண்டுவர முடிவு செய்துள்ளார்.

இதையடுத்து ஊழலை ஒழிக்க வகை செய்யும் 6 மசோதாக்கள் தயார் செய்யப்பட்டுள்ளது. அடுத் மாதம் கூடும் பாராளுமன்ற கூட்டத்தில் இந்த ஊழல் ஒழிப்பு மசோதாக்களை கொண்டுவர ராகுல் காந்தி முடிவு செய்துள்ளார். ஊழலுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி செயல்படுகிறது என்ற எண்ணத்தை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்று ராகுல் நினைக்கிறார். இதற்கு மூத்த காங்கிரஸ் தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.  

இதற்கிடையே காங்கிரஸ் வேட்பாளர் தேர்வும் கட்சிக்கு நற்பெயரை ஏற்படுத்தும் வகையில்  வேண்டும் என்று ராகுல் தனது கருத்தை தெரிவித்துள்ளார். ஊழல் குற்றச்சாட்டுகளில் தொடர்புடையவர்களுக்கு சீட்  கொடுக்க கூடாது என்பதில் ராகுல் காந்தி உறுதியாக உள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்