முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் இன்று துவக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 12 ஜனவரி 2014      விளையாட்டு
Image Unavailable

 

மெல்போர்ன், ஜன. 13 - ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் சாம்பியன் பட்டத்திற்கு குறி வைத்து இருக்கிறார். 

இந்த ஆண்டின் முதலாவது கிராண்ட் ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னி ஸ் மெல்போர்ன் நகரில் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது வருகிற 26_ம் தேதி வரை இந்தப் போட்டி நடைபெறுகிறது. 

உலகின் நம்பர் _ 1 வீரரான ரபேல் நடால் (ஸ்பெயின்), 2_ ம் நிலை வீரரான ஜோகோவிச் (செர்பியா), ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), ஆன்டி முர்ரே (இங்கிலாந்து), டேவிட் பெர்ரர் (ஸ்பெயின்) டெல்பெட்ரோ(அர்ஜென்டினா) போன்ற முன்னணி வீரர்கள் இடையே பட்டம் வெல்ல கடும் போட்டி நிலவுகிறது. 

நடால் கடந்த ஆண்டு 2 கிராண்ட் ஸ்லாம் (பிரெஞ்சு ஓபன், அமெரிக்க ஓபன்) பட்டங்களை வென்றார். ஆபரேசனுக்குப் பிறகு அவரது ஆட்டம் சிறப்பாக இருந்தது. 

கடந்த முறை அவர் ஆஸ்திரேலிய ஓபனில் காயத்தால் ஆடவில்லை. 2009_ம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்ற அவர் 2_வது முறையாக அந்த பட்டத்தை வெல்லும் ஆர்வத்தில் உள்ளார். 

நடால் இதுவரை 13 கிராண்ட் ஸ்லாம் பட்டம் (ஆஸ்திரேலியா ஓபன் 1, பிரெஞ்சு ஓபன் 8, விம்பிள்டன் 2, அமெரிக்க ஓபன் 2 ) பெற்றுள்ளார். 14_வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் வெல்ல அவர் போராட வேண்டும். 

நம்பர் _ 2 வீரரான ஜோகோவிச் ஆஸ்தி ரேலிய ஓபன் பட்டத்தை தொடர்ந்து 4_வது முறையாக கைப்பற்றும் ஆர்வத்தில் உள்ளார். அவர் 2008, 2011, 2012, 2013 ஆகிய ஆண்டுகளில் பட்டம் பெற்று இருந்தார். 

4_ம் நிலை வீரரான ஆன்டி முர்ரே 3 முறை இறுதிப் போட்டியில் (2010, 2011, 2013) தோற்று பட்டத்தை இழந்தார். ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை முதல் முறையாக வெல்லும் ஆர்வத்தில் அவர் உள்ளார். 

6_ம் நிலை வீரரான ரோஜர் பெடரர் 17 கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற சாதனை வீரர் ஆவார். 2012 _ம் ஆண்டு விம்பிள்டனுக்கு பிறகு அவர் பட்டம் வென்றது இல்லை. அரை இறுதிவரை நுழைவது அவருக்கு சவாலானது. 

மகளிர் பிரிவில் நம்பர் _ 1 இடத்தில் இருக்கும் செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா), நடப்பு சாம்பியன் விக்டோரியா அசரென்கா(பெலாரஸ்) 3_ம் நிலை வீராங்கனை மரியா ஷரபோவா (ரஷ்யா) ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவுகிறது. 

பெலாரஸ் வீராங்கனையான அசரென்கா ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை 3_வது முறையாக வெல்லும் நிலையில் உள்ளார். 

செரீனா வில்லியம்ஸ் 17 கிராண்ட் ஸ்லாம் பட்டம் (ஆஸ்திரேலிய ஓபன் 5, பிரெஞ்சு ஓபன் 2, விம்பிள்டன் 5, அமெரிக்க ஓபன் 5) வென்றுள்ளார். 18_வது பட்டத்திற்காக காத்திருக்கிறார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago