முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜாதி வாரியாக கணக்கெடுப்பு டாக்டர் சேதுராமன் வரவேற்பு

ஞாயிற்றுக்கிழமை, 22 மே 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,மே.22  - நாடு தழுவிய அளவில் ஜாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோகன்சிங் தலைமையில் நடைபெற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக எங்களின் அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் சார்பாக ஜாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளோம். நேற்றைய அறிவிப்பு எங்களின் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகும் என டாக்டர் சேதுராமன் கருத்து தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் கூறுகையில், வரும் ஜூன் மாதம் முதல் நடைபெற உள்ள இந்த கணக்கெடுப்பு ஜாதி, மதம், வறுமை உள்ளிட்டவற்றை அடிப்படையாகத் கொண்டு அமையும். இதன் மூலம் மக்களின் சமுதாயப்பொருளாதார சூழ்நிலை தெரியவரும் எனவும், மத்திய அமைச்சரவை செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.  கடந்த 1931 -ம் ஆண்டுக்கு பிறகு இப்போதுதான் ஜாதி வாரிக்கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. தமிழகத்தில் மொத்தம் சுமார் 15 முக்கிய ஜாதிகளும், சுமார் 230க்கும் மேற்பட்ட உட்பிரிவுகளை மட்டும் கணக்கில் கொள்ளால் ஜாதிகள் அடிப்படையில் கணக்கெடுப்பு நடத்த வேண்டும். 

அதேபோன்று தேவர் (கள்ளர்), தேவர் (மறவர்), தேவர் (அகமுடையார்) என்ற பிரிவுகள் உள்ளன. ஏற்கனவே உள்ள கல்வி, வேலைவாய்ப்பு போன்ற சலுகைகள் எதுவும் பாதிக்காதவண்ணம் தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்த ஆணைக்கு வலுச்சேர்க்க இந்த கணக்கெடுப்பு உதவும். இதனைத் தனித்தனியாக கணக்கெடுக்காமல் ஒட்டுமொத்த தேவரினமாக கணக்கெடுத்து அறிவிக்கவேண்டும். ஏற்கனவே முதல்வர் ஜெயலலிதா அறிவித்த தேவர் இனம் என்ற ஆணை உள்ளது. பிறகு வந்த கருணாநிதி அந்த தேவரின் ஆணையைக் கிடப்பில் போட்டுவிட்டார். ஒவ்வொரு ஜாதிகளிலும் பல உட்பிரிவுகள் இருந்தால் தேவர், நாடார் கவுண்டர், வன்னியர், யாதவர் என்று மட்டும் உட்பிரிவுகள் இல்லாமல் எடுத்துக்கொண்டால் தமிழகத்தில் 15 ஜாதிகள் தான் இருக்கும். கணக்கு வைப்பதில், இட ஒதுக்கீட்டில் குழப்பமில்லாமல் செயல்பட அரசு அதிகாரிகளுக்கும் எளிதாக இருக்கும். ஆகவே முதல்வர் ஜெயலலிதா அறித்த ஆணையின் அடிப்படையில் இந்த அறிவிப்பு இருக்கவேண்டும் எனமத்திய அரசுக்கு வேண்டுதல் விடுகிறோம் என்று டாக்டர் சேதுராமன் தனது அறிக்கையில் விடுத்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்