முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்திரேலிய ஓபன்: ஜோகோவிச்- செரீனா முன்னேற்றம்

புதன்கிழமை, 15 ஜனவரி 2014      விளையாட்டு
Image Unavailable

 

மெல்போர்ன், ஜன. 16 - ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச், டேவிட் பெர்ரர், செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் ஒற்றையர் பிரிவின் 2_வது சுற்றில் வெற்றி பெற்று 3_வது சுற்றுக்கு முன்னேறினர். 

இந்த வருடத்தின் முதலாவது கிராண்ட் ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மெல்போர்ன் நகரில் கடந்த சில நாட்களாக வெகு விமர்சையாக நடந்து வருகிறது. 

இந்தப் போட்டியில் சாம்பியன் பட்டத் தைக் கைப்பற்ற முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் களம் இறங்கி உள்ளனர். இதற்காக அவர்கள் தீவிரப் பயிற்சி எடுத்து உள்ளனர். 

கிராண்ட் ஸ்லாம் போட்டியான இதில் பங்கேற்று வரும் முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றனர். 

ஆடவருக்கான ஒற்றையர் பிரிவின் 2_வது சுற்று ஆட்டம் ஒன்று நடந்தது. இதில் நடப்பு சாம்பியனான நோவக் ஜோகோவிச்சும், அர்ஜென்டினா வீரர் லியாண்டோவும் மோதினர். 

இதில் செர்பிய வீரரான ஜோகோவிச் அபாரமாக ஆடி, 6 _0, 6 _4, 6 _4 என்ற செட் கணக்கில் லியாண்டோவை வீழ்த்தி 3_வது சுற்றுக்குள் நுழைந்தார். 

மற்றொரு 2_வது சுற்று ஆட்டம் ஒன்றில் ஸ்பெயின் முன்னணி வீரரான டேவிட் பெர்ரரும், பிரான்ஸ் வீரரும் பலப்பரிட்சை நடத்தினர். 

5 செட் வரை நீடித்த இந்த ஆட்டத்தில் 3_ம் நிலை வீரரான பெர்ரர் கடும் போராட்டத்திற்குப் பிறகு, 7_6, 7_2, 5_7, 6_0, 6_3 என்ற செட் கணக்கில் அட்ரியனை வென்றார். 

செக். குடியரசு வீரர் தாமஸ் பெர்டிச் 6_4, 6_1, 6_3 என்ற செட் கணக்கில், பிரான்ஸ் வீரர் கென்னியை எளிதில் தோற்கடித்து 3_வது சுற்றுக்குள் நுழந்தார். 

14_ம் நிலை வீரரான மைக்கேல் யூவ்ஜெனி (ரஷ்யா) அதிர்ச்சிகரமாக தோற்றார். ஜெர்மனியைச் சேர்ந்த புளோரியன் மேயர் 6_4, 3_6, 6_3, 3_6, 6_3 என்ற செட் கணக்கில் யூவ் ஜெனியை வென்றார். 

மகளிருக்கான ஒற்றையர் பிரிவின் 2_வது சுற்று ஆட்டம் ஒன்றில், செரீனா வில்லியம்சும், செர்பிய வீராங்கனை வெஸ்னாவும் மோதினர். 

இதில் உலகின் முதல் நிலை வீராங்கனையான செரீனா சிறப்பாக ஆடி 6_1, 6_2 என்ற நேர் செட் கணக்கில் எளிதான வெற்றியைப் பெற்றார். 

மற்றொரு 2_வது சுற்று ஆட்டம் ஒன்றில் சீனாவைச் சேர்ந்த லீனா (4_ம் நிலை வீராங்கனை) 6_0, 7_6, (7) என்ற நேர் செட் கணக்கில் சுவிட்சர்லாந்தின் பெலிண்டாவை தோற்கடித்தார். 

26_ம் நிலை வீராங்கனையான சபரோவா மற்றொரு ஆட்டத்தில் 6_7 (7), 6_3, 6_0 என்ற செட் கணக்கில் செக். குடியரசு வீராங்கனை லுசியை வென்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்