முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊழல் புகார் உள்ளவர்களுக்கு சீட் கொடுக்கக் கூடாது

திங்கட்கிழமை, 13 ஜனவரி 2014      அரசியல்
Image Unavailable

 

புதுடெல்லி, ஜன.14 - ஊழல் புகார் கூறப்பட்டவர்களுக்கு  தேர்தலில் போட்டியிட சீட் கொடுக்கக் கூடாது என்று குஜராத் முதல்வரும், பாஜக பிரதம வேட்பாளருமான நரேந்திரமோடி  வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்ததை அடுத்து பாஜக இந்த முடிவை மேற்கொண்டுள்ளது. 

இந்த ஆண்டு ஏப்ரல், மே மாதத்தில் பாராளுமன்றத்துக்கு தேர்தல் நடைபெற உள்ளது. சமீபத்தில் நடைபெற்ற சட்ட சபை தேர்தலில் பாஜக வெற்றிபெற்றாலும் ஆம் ஆத்மி கட்சி பாஜகவுக்கு பெரும் சவாலாக உள்ளது. எனவே டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு வந்த ஒரு மாதத்துக்குள் அங்கு பாஜக போராட்டம் நடத்தியுள்ளது.

பாஜகவுக்கு கிடைக்கக் கூடிய வாக்குகளை ஆம் ஆத்மி கட்சி பிரித்து விடும். எனவே அந்த கட்சியை மிக எளிதாக நினைக்க வேண்டாம் என்று ஆர். எஸ்.எஸ். தலைவர் கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஊழல் எதிர் ப்பு என்ற ஆயுதத்தை வைத்து டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியைப் பிடித்தது. எனவே பாஜகவும் ஊழல் எதிர்ப்பு கொள்கையை கடைபிடிக்க முயற்சித்து வருகிறது.  வரும் பாராளுமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளில் வெற்றிபெற புது வியூகத்தை பாஜக கண்டறிந்துள்ளது. அதாவது பாராளுமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஊழல் புரிந்தவராகவும்,  குற்றப் பின்னணி உள்ளவர்களாகவும் இருக்கக் கூடாது என்பதில் நரேந்திரமோடி மிக உஷாராக உள்ளார்.

ஆம் ஆத்மி கட்சி ஊழலை ஒழிப்போம் என்ற கோஷத்துடன் ஆட்சிக்கு வந்துள்ளது. இதே கோஷத்துடன் பாராளுமன்றத்  தேர்தலையும் அந்த கட்சி சந்திக்க திட்டமிட்டுள்ளது. ஊழலில் சிக்காதவர்களைத் தேர்வு செய்து  300 இடங்களில் போட்டியிட ஆம் ஆத்மி கட்சி முடிவு செய்துள்ளது. இது பாஜக, காங்கிரஸ் கட்சிகளின் வெற்றி வாய்ப்பை பாதிக்கும் என்று கருதப்படுகிறது. இதனால் பாஜகவும், காங்கிரஸ் கட்சியும் தங்களது பிரச்சார வியூகத்தை மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

காங்கிரஸ் கட்சி சார்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுபவர்கள் கை சுத்தமானவர்களாகவும், ஊவல் புகாரில் சிக்காதவர்களாகவும் இருக்க வேண்டும். அவர்களுக்கு மட்டுமே சீட் கொடுக்க வேண்டும் என்று ராகுல் காந்தி உறுதியாக தெரிவித்துள்ளார். இதே பாணியை பாஜகவும் கடைபிடிக்க உள்ளது. சீட் பெறுபவர்கள் நல்ல நடத்தை உள்ளவர்களாகவும், லஞ்ச, லாவண்யத்தில் சிக்காதவர்களாகவும் இருக்க வேண்டும் என்று பாஜக எதிர்பார்க்கிறது. 

ஊழல் குற்றச்சாட்டு உள்பட வேறு எந்த குற்றச்சாட்டுகளில் தொடர்புடையவர்களையும் வேட்பாளர்களாகத் தேர்வு செய்ய வேண்டாம் என்று மாநில பாஜக தலைவர் களுக்கு நரேந்திரமோடி உத்தரவிட்டுள்ளார். ஒவ்வொரு தொகுதியிலும் சுறுசுறுப்பாக செயல்பட்டு நல்ல பெயர் எடுத்த இளைஞர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றும் மூத்த தலைவர்களிடம்  மோடி வற்புறுத்தி யுள்ளார். நல்ல இளைஞர்களைத் தேர்வு செய்து போட்டியிட செய்வதன் மூலம் ஆம் ஆட்மி கட்சியின் சவாலை முறியடிக்க முடியும் என்று மோடி கருதுகிறார். வேட்பாளர் தேர்வு மட்டுமல்ல, தேர்தல் அறிக்கை பிரச்சாரம் ஆகியவற்றிலும் சில மாற்றங்களை செய்ய மோடி வியூகம் வகுத்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்