ஆப்கானில் அமெரிக்க ராணுவ குண்டு வீச்சில் 7 பேர் பலி

Image Unavailable

 

காபூல், ஜன.17 - ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவம் குண்டு வீசியதில் 7 குழந்தைகள் உயிரிழந்த னர். ஆப்கானிஸ்தானில் தங்கி உள்ள அமெரிக்கக் கூட்டுப் படைகள் தலிபான் மற்றும் தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

பர்வான் பிராந்தியத்தில் உள்ள சியாக்ரிக் என்ற இடத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக அமெரிக்காவுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அமெரிக்க விமானம் பறந்து சென்று குண்டு வீசித் தாக்கியது. ஆனால் குண்டு வீசப்பட்ட இடத்தில் தீவிரவாதிகள் எவரும் இல்லை. அங்கு பெண்களும், குழந்தைகளும் இருந்தனர். அவர்கள் மீது குண்டு விழுந்ததில் 7 குழந்தைகள் இறந்தனர்.

இது ஆப்கன் அரசுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ஆப்கன் அதிபர் ஹமீது சர்காய், அமெரிக்கக் கூட்டுப் படையிடம் விளக்கம் கேட்டுள்ளார். அப்பாவி குழந்தைகல் கொல்லப்பட்டதற்கு ஆப்கானிஸ்தானில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 

                  

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ