முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிரிக்கெட்டுக்கு வராவிட்டால் டாக்டர் ஆகி இருப்பேன்

சனிக்கிழமை, 18 ஜனவரி 2014      விளையாட்டு
Image Unavailable

 

சென்னை, டிச.19 - கிரிக்கெட்டுக்கு வராவிட்டால் டாக்டர் ஆகி இருப்பேன் என்று டெண்டுல்கர்

 கூறினார். சென்னை வேலம்மாள் கல்வி நிறுவனம் சார்பில் பாராட்டு விழா, முகப்பேரில் உள்ள வேலம்மாள் பள்ளியில் நடந்தது. இதில் மனைவியுடன் கலந்துகொண்ட டெண்டுல்கரை வேலம்மாள் கல்வி அறக்கட்டளைத் தலைவர் முத்துராமலிங்கம்  வெள்ளி வாளை நினைவுப் பரிசாக வழங்கினார். தேசிய அளவில் சாதனை படைத்த வேலம்மாள் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத் தொகையாக டெண்டுல்கர் ரூ.27 லட்சம் வழங்கினார். கிரிக்கெட் அகாடெமிக்கான அடிக்கல் லையும் அவர் நாட்டினார். பின்னர் டெண்டுல்கர் பேசியதாவது:

நான் கிரிக்கெட்டுக்கு வராவிட்டால் டாக்டர் ஆகி இருப்பேன். ஆனால் தற்போது கிரிக்கெட் இல்லாத எனது வாழ்க்கையை கனவிலும் நினைப்பது கடினம். கிரிக்கெட் இல்லாத வேறு விளையாட்டு என்றால் டென்னிஸ்க்கு சென்றிருப்பேன். அனைத்து சாதனைகளும் ஒருநாள் முறியடிக்கப்படும். எனது சாதனைகளை இந்தியர் ஒருவர் முறியடித்தால் மகிழ்ச்சி அடைவேன்.  

கவாஸ்கர். விவியன் ரிச்சர்ட்ஸ் எனது ஹீரோக்கள். இதுபோல் ரவிசாஸ்திரி கங்குலி ஆகியோர் எனக்குப் பிடிக்கும். கேப்டந் பதவியில் தோனி சிறப்பாக செயல்படுகிறார். 2015_ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உலக கோப்பையை இந்திய அணி கைப்பற்ற அதிக வாய்ப்பு உள்ளது என்றார்.           

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago