முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முஷாரப் உடல் நிலையை ஆராய மருத்துவக்குழு

சனிக்கிழமை, 18 ஜனவரி 2014      உலகம்
Image Unavailable

 

இஸ்லாமாபாத், ஜன, 19 - பாகிஸ்தான் முன்னாள் ராணுவ ஆட்சியாளர் பர்வீஸ் முஷாரப் வரும் 23ம் தேதிவரை விசாரணைக்கு ஆஜராகாமல் இருக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

மேலும் அவர் உடல் நிலையை ஆராய்ந்து ஜனவரி 24க்குள் அறிக்கை தாக்கல் செய்ய மருத்துவக்குழு அமைக்கவும் உத்தரவிட்டது. 2007ம் ஆண்டில் நெருக்கடி நிலையை அமல்படுத்தி தேச துரோகம் இழைத்தார் என குற்றம்சாட்டி முஷாரபிடம் விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது.

விசாரணைக்கு முஷாரப் வியாழக்கிழமை (16ம் தேதி) தவறாது ஆஜராகவேண்டும் என்று சிறப்பு நீதிமன்றம் 9ம் தேதி எச்சரித்திருந்தது. ஆனால் விசாரணைக்கு அவர் ஆஜராகவில்லை. அவர் தரப் பில் வழக்கறிஞர் அன்வர் மன் சூர் ஆஜராகி கூறியதாவது: உடல்நிலை குன்றியுள்ளதால் முஷாரப் விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை.

அவரை சிகிச்சைக்காக அமெரிக்கா அழைத்துச் செல்ல வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். டெக்சாஸில் உள்ள இதய மருத்துவமனையின் டாக்டர்கள் கொடுத்துள்ள ஆவணங்களுடன் கடிதத்தை இணைத்துள்ளோம். கூடுதல் சிகிச்சைக்காக அவரை அந்த மருத்துவமனைக்கு அனுப்பும்படி அவர்கள் பரிந்துரைத்துள்ளனர் என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்