முதல் ஒரு நாள்: இந்தியா போராடி தோல்வி

ஞாயிற்றுக்கிழமை, 19 ஜனவரி 2014      விளையாட்டு
Image Unavailable

 

நேப்பியர், ஜன. 20  - இந்திய அணிக்கு எதிராக நேப்பியரில் நடந்த முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 24 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

2_வதாக சேசிங் செய்த இந்திய அணி இந்த ஆட்டத்தில் போராடிய போதிலும் வெற்றி வாய்ப்பை இழந்தது. இந்தி ய அணி தரப்பில் 2 வீரர்கள் மட்டும் தாக்குப் பிடித்தனர். 

இந்தப் போட்டியில் முதலில் களம் இறங்கிய நியூசிலாந்து அணி 292 ரன்னை எடுத்தது. அந்த அணி தரப்பில் வில்லியம்சன் 71 ரன்னையும், 

டெய்லர் 55 ரன்னையும் எடுத்தனர். அதிரடியாக ஆடிய ஆண்டர்சன் 67 ரன் எடுத்தார். 

பின்பு ஆடிய இந்தியஅணி 268 ரன்னில் ஆட்டம் இழந்தது. இதனால் நியூசிலாந்து அணி 24 ரன்னில் வெற்றி பெற்றது. 

இந்திய அணி தரப்பில் விராட் கோக்லி சதம் அடித்தும் இந்திய அணியால் வெற்றி பெற முடியவில்லை. கேப்டன் தோனி 47 ரன் எடுத்தார். மற்ற வீரர்கள் குறைந்த ரன்னில் ஆட்டம் இழந்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்: