முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கன்னியாஸ்திரிக்கு ஆண் குழந்தை: ரோம் நகரில் பரபரப்பு

ஞாயிற்றுக்கிழமை, 19 ஜனவரி 2014      உலகம்
Image Unavailable

 

ரோம், ஜன. 20 - ரோம் நகரில் துறவிகள் மடத்தில் வசித்த கன்னியாஸ்திரிக்கு பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு பிரான்சிஸ் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

ரோம் நகரில் உள்ளது ரீட்டி. இந்நகரின் அருகில் உள்ள கேம்ப்போமோரோ என்ற இடத்தில் லிட்டில் டிசைப்பிள்ஸ் ஆப் ஜீசஸ் என்ற கான்வென்ட் உள்ளது. 

இங்கு வசிக்கும் 31 வயதுள்ள ஒரு கன்னியாஸ்திரிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. 

உடனடியாக அவரை ரீட்டி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், கன்னியாஸ்திரி நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதை கண்டு பிடித்தனர். 

மேலும் அந்த கன்னியாஸ்திரிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளதை அறிந்து உடனடியாக சிகிட்சை அளித்தனர். 

பிரசவத்தில் அந்த கன்னியாஸ்திரிக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை 3.5 கிலோ எடையுடன் ஆரோக்கியமாக உள்ளது. தாயும் நலமாக இருக்கிறார் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். 

கன்னியாஸ்திரிக்கு குழந்தை பிறந்ததை அறிந்து மருத்துவமனையில் பிரசவத்துக்கு வந்திருந்த மற்ற தாய்மார்கள் உடனடியாக துணிகள் மற்றும் அன்பளிப்புகளை சேகரித்து கன்னியாஸ்திரிக்கு வழங்கினர். 

இது குறித்து சம்பந்தப்பட்ட கன்னியாஸ்திரி கூறுகையில், நான் கர்ப்பமாக இருப்பது எனக்கு தெரியவில்லை. வயிற்று வலி என்று தான் நினைத்துக் கொண்டு இருந்தேன் என்று தெரிவித்துள்ளார். 

இது குறித்து துறவிகள் தங்கியிருக்கும் கான்வென்ட் நிர்வாகம் கருத்து எதுவும் தெரிவிக்ககவில்லை. ஆனால் குழந்தையை கன்னியாஸ்திரியே வளர்க்க முடிவு செய்துள்ளார். 

மேலும், குழந்தைக்கு பிரான்செஸ்கோ ( போப் பிரான்சிஸ் பெயர்) என்று பெயர் சூட்டி உள்ளார். கான்வென்டில் உள்ள மற்ற கன்னியாஸ்திரிகள் இதனால் ஆச்சரியம் அடைந்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்