முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காட்டு தீ: கலிபோர்னியா வறட்சி பகுதியாக அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 19 ஜனவரி 2014      உலகம்
Image Unavailable

 

லாஸ்ஏஞ்சல்ஸ், ஜன. 20 - அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணம் வறட்சி பகுதியாக அறிவிக்கப்பட்டு அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு உள்ளது. 

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் மழை பெய்யாமல் கடும் வறட்சி நிலவுகிறது. கடும் வெயில் காரணமாக இங்குள்ள காடுகள் தீப்பிடித்து எரிகின்றன. 

சமீபத்தில் லாஸ்ஏஞ்சல்ஸ் புறநகரில் உள்ள காட்டில் தீப்பிடித்தது. அதில் ஏராளமான வீடுகள் எரிந்து சாம்பலாயின. 

எனவே அப்பகுதியில் குடியிருந்த மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். 

கலிபோர்னியா மாகாணத்தில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது. எனவே இங்கு வாழும் மக்கள் வழக்கத்தை விட 20 சதவீதம் தண்ணீரை குறைத்து செலவிடுகின்றனர். 

எனவே கலிபோர்னியா மாகாணம் அமெரிக்காவின் வறட்சி பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதை கவர்னர் ஜெர்ரி பிரவுன் தெரிவித்தார். 

இது குறித்து சான்பிரான்சிஸ்கோ நகரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது 100 ஆண்டுகளுக்கு பிறகு கலிபோர்னியாவில் கடும் வறட்சி நிலவுகிறது. 

எனவே இங்கு அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. தண்ணீர் பற்றாக் குறை நிலவுவதால் கலிபோர்னியா மக்கள் அதை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்