முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பேச்சு வார்த்தைக்கு முன்வர தலிபான்களுக்கு அழைப்பு

திங்கட்கிழமை, 20 ஜனவரி 2014      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், ஜன.21 - ஆயுதம் ஏந்துவதை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும் என்று தலிபான்களுக்கு அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது.

மேலும், ஆப்கானிஸ்தானில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்காவின் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜேகார்னி கூறியதாவது:- ஆப்கானிஸ்தான் மக்கள் வளர்ச்சிக்காக நாள்தோறும் பாடுபட்டுவரும் அமெரிக்கர்கள் உள்பட அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட இத்தாக்குதலை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. ஆயுதம் ஏந்துவதை நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும் என்று தலிபான்களுக்கு மீண்டும் அழைப்பு விடுகிறோம் என்றார் கே கார்னி. ஐ.நா. பொதுச் செயலாளர் பான்கீ-மூன் செய்தியாளர்களிடம் கூறுகையில், கபூல் தற்கொலைப்படைத் தாக்குதலில் உயிரிழந்த அமெரிக்காவின்  பாஸ்ரா ஹாசன், பாகிஸ்தானின் நஸ்ரீன் ஜமால், லெபனானின் காஞ்சர் வாபெல் அப்துல்லா, ரஷியாவின் வாடிம் நசரோவ் ஆகியோரின் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். தாக்குதலில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். அமைதி மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் ஒரு சிறந்த எதிர்காலத்தை நோக்கிய ஆப்கானிஸ்தான் பயணத்தை முழுமையாக ஆதரிக்கிறோம் எனறார் பான் கீ-மூன். ஆப்கானிஸ்தானில் காபூல் நகரில் உள்ள தாவெர்னா நட்சத்திர ஹோட்டலில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிட்டன் அரசியல் பிரமுகர் தாமேந்தர் சிங் பாங்குரா மற்றும் வெறிநாட்டைச் சேர்ந்தவர்கள் உள்பட 21 பேர் உயிரிழந்தனர். தாமேந்தர் சிங், பிரிட்டனைச் சேர்ந்த தொழிலாளர் கட்சியின் ஐரோப்பிய நாடாளுமன்ற தென்கிழக்கு பகுதி வேட்பாளர் ஆவார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்