முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2ஜி ஊழல் வழக்கில் கம்பெனி அதிகாரிகள் 56 பேருக்கு ஜாமீன் கிடைக்குமா?

ஞாயிற்றுக்கிழமை, 22 மே 2011      ஊழல்
Image Unavailable

புதுடெல்லி, மே.- 23 - 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கம்பெனி அதிகாரிகள் 5 பேரின் ஜாமீன் மனு மீதான முடிவை டெல்லி ஐகோர்ட் இன்று அறிவிக்கிறது.
ரூ.1.76 லடசம் கோடி 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தி.மு.க. வைச் சேர்ந்த முன்னாள் தொலைதொடர்பு துறை அமைச்சர், அவரது முன்னாள் உதவியாளர்கள் சந்தோலியா, சித்தார்த்த வெகுரா, ஸ்வான் டெலிகாம் அதிபர் சாகித் உஸ்மான் பல்வா, ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் கம்பெனியின் அதிகாரிகள் ஹரி நாயர், சுரேந்திர பிப்பாரா, டி.பி. ரியாலிட்டீஸ் அதிகாரி வினோத் கோயங்கா அதாக் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் கெளதம் தோஷி, யுனிடெக் கம்பெனி அதிகாரி சஞ்சை சந்திரா ஆகியோர் கைது செய்யப்பட்டு தற்போது திகார் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் கெளதம் தோஷி, வினோத் கோயங்கா, ஹரிநாயர், சுரேந்திர பிப்பாரா, சஞ்சை சந்திரா ஆகியோர் தங்களை ஜாமீனில் விடுதலை செய்யுமாறு டெல்லி ஐகோர்ட்டில் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இந்த ஜாமீன் மனுக்கள் மீதான வாத பிரதிவாதங்களை கேட்ட நீதிபதி அஜித் பாரிகோகி மனுக்கள் மீதான தீர்ப்பை மே 9ம் தேதிக்கு ஒத்திவைத்தார். இந்த நிலையில் இவர்கள் 5 பேரும் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து இந்த 5 பேரும் அப்பீல் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இந்த ஜாமீன் மனுக்கள் மீதான தீர்ப்பை டெல்லி ஐகோர்ட்டு இம்மாதம் 23 ம் தேதிக்கு ஒத்திவைத்தது. அதன்படி இந்த மனுக்கள் மீதான தீர்ப்பை டெல்லி ஐகோர்ட் நீதிபதி அஜித் பாரிகோகி இன்று அறிவிக்க இருக்கிறார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்