முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஸா மீது இஸ்ரேல் விமானத் தாக்குதல்

திங்கட்கிழமை, 20 ஜனவரி 2014      உலகம்
Image Unavailable

 

ஜெருசலம், ஜன, 21 - காஸா கரை பகுதியில் இஸ்ரேல் போர் விமானங்கள் ஒரே இரவில் இரு முறை தாக்குதல் நடத்தின. தெற்கு இஸ்ரேல் பகுதி மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இத்தாக்குதல் நடத்தப்பட்டது எனத் தெரிவிக் கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வடக்கு மற்றும் மத்திய காஸா கரை பகுதியில் பயங்கரவாதச் செயல்கள் நடைபெறும் இரு இடங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. காஸாவிலிருந்து தெற்கு இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்கு தல் நடத்தப்பட்டதற்கு பதிலடியாக இத் தாக்குதல் நடத்தப்பட்டது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த புதன்கிழமை இதே போன்றதொரு தாக்குதலை இஸ்ரேல் மேற்கொண்டதில், காஸாவில் ஒரு பெண் மற்றும் நான்கு குழந்தைகள் காயமடைந்தனர் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago