முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மன்மோகன்சிங் இன்று எத்தியோப்பியா பயணம்

ஞாயிற்றுக்கிழமை, 22 மே 2011      இந்தியா
Image Unavailable

புது டெல்லி,மே.- 23 - பிரதமர் மன்மோகன்சிங் இன்று 6 நாள் பயணமாக எத்தியோப்பியா, தான்சானியா நாடுகளுக்கு புறப்பட்டு செல்கிறார். இந்த பயணம் மூலம் ஆப்பிரிக்க நாடுகளுடனான இந்தியாவின் உறவு மென்மேலும் வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது உலகையே அச்சுறுத்திக் கொண்டிருப்பது 2 முக்கிய விஷயங்கள். ஒன்று பயங்கரவாதம். மற்றொன்று கடற்கொள்ளை. இந்த இரண்டையும் திறம்பட சமாளிப்பது எப்படி? என்பது குறித்து ஆப்பிரிக்க நாடுகளுடன் பிரதமர் மன்மோகன்சிங் ஆலோசிக்கிறார். முதல் முதலாக அவர் அடீஸ்அபாபாவுக்கு புறப்பட்டு செல்கிறார். அங்கு 15 ஆப்பிரிக்க நாடுகள் கலந்து கொள்ளும் 2 வது ஆப்பிரிக்க, இந்திய அமைப்பின் உச்சி மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொண்டு தன்னுடைய கருத்துக்களை தெரிவிக்கிறார்.
ஆப்பிரிக்காவையும், இந்தியாவையும் பாதிக்கக்கூடிய அம்சங்களாக தீவிரவாதமும், கடல் கொள்ளையும் திகழ்வதாக இந்தியாவைப் போலவே ஆப்பிரிக்காவும் கருதுகிறது. எனவே இவற்றை ஒழித்துக் கட்டுவது எப்படி? அதற்கான வழிவகைகள் என்ன? என்பது குறித்து இந்திய, ஆப்பிரிக்க தலைவர்கள் இந்த மாநாட்டில் விவாதிக்க இருக்கிறார்கள். தனது 6 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மன்மோகன்சிங் அடுத்த வாரம் தாயகம் திரும்புவார். இந்த பயணத்தின் மூலம் ஆப்பிரிக்க நாடுகளுடனான உறவு மேலும் வலுப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago