அணியில் இஷாந்த் சர்மாவை சேர்த்தது தவறு: கங்குலி

திங்கட்கிழமை, 20 ஜனவரி 2014      விளையாட்டு
Image Unavailable

 

கொல்கத்தா, ஜன. 21 - நியூசிலாந்திற்கு எதிராக நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணியில் இஷாந்த் சர்மாவைச் சேர்த்தது தவறு என்று முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி கருத்து தெரிவித்து இருக்கிறார். 

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒரு நாள் போட்டி நேப்பியரில் நடந்தது. இதில் 24 ரன் வித்தியாசத்தில் நியூசி. வெற்றி பெற்றது. 

இந்தத் தோல்வி தொடர்பாக இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் டெலி விசன் வர்ணனையாளருமான கங்குலி, இஷாந்த் சர்மா தேர்வு குறித்து விமர்சித்து உள்ளார். 

இது தொடர்பாக அவர் கூறியதாவது _ இஷாந்த் சர்மா சீனியர் பௌலர் ஆவார். அதிக அனுபவம் பெற்ற அவரால் நேர்த்தியுடன் பந்து வீச முடியவில்லை. 

நெருக்கடியில் இருக்கும் அவர் தொடர்ந்து ரன்களை வாரி கொடுத்து வருகிறார். அவர் அணியில் தொடர்ந்து நீடித்து வருவது எனக்கு இதுவரை புரியவில்லை. 

தொடர்ந்து அவரை அணியில் சேர்த்து இருப்பது தவறானது. இந்திய பந்து வீச்சில் மொகமது சமி முதுகெலும்பாக உள்ளார். இந்திய அணிக்கு கிடைத்த சிறந்த பௌலர் அவர் என்பதில் சந்தேகம் இல்லை. 

விராட் கோக்லி உலகின் சிறந்த ஒரு நாள் போட்டி பேட்ஸ்மேன் என்பதில் சந்தேகம் இல்லை. உலகின் அனைத்து பகுதிகளிலும் சிறப்பாக விளையாடி வருகிறார். 

ஒரு நாள் போட்டிக்கான அணியில் புஜாரா, ஜாஹிர்கானை சேர்க்க வேண்டும். நியூசிலாந்து போன்ற ஆடுகளங்களில் அவர்களது பணி முக்கியத்துவம் பெற்று இருக்கும். 

டெஸ்ட் அணியில் இடம் பெற்று இருந்த அவர்களை தேர்வுக் குழுவினர் ஒரு நாள் போட்டிக்கான அணியிலும் சேர்த்து இருக்க வேண்டும். 

பௌலிங்கைப் பொறுத்தவரையில் ஜாஹிர்கான் கண்டிப்பாக தேவை. டெஸ்ட் போட்டியில் 30 ஓவர் வீச முடிந்தால் அவர் ஒரு நாள் போட்டியில் 10 ஓவர் வீச முடியாதா? தேர்வு குழுவினர் இதை சிந்திக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

Sathu Maavu | Health mix | BABY FOOD for 7 Months old | குழந்தைகளுக்கு சத்து மாவு

KFC Style Fried Chicken Recipe in Tamil | KFC Style Fried Chicken at Home | English Subtitles

Apple Halwa Recipe in Tamil | ஆப்பிள் அல்வா | Halwa Recipe in Tamil | Sweet Recipe

Star Hotel Tandoori Chicken Recipe in Tamil | தந்தூரி சிக்கன் | Chicken Recipe

Paruppu Payasam Recipe in Tamil | பாசி பருப்பு பாயாசம் | Moong Dal Payasam Recipe| Sweet Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்: