முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேர்தல் தோல்வி எதிரொலி:பா.ம.க. மாநில அந்தஸ்தை இழக்கிறது

ஞாயிற்றுக்கிழமை, 22 மே 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை,மே.- 23 - தேர்தல் தோல்வியால் பா.ம.க மாநில கட்சி அங்கீகாரத்தை இழக்கிறது.  தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. 30 தொகுதிகளில் போட்டியிட்டு 3 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. பா.ம.க.வுக்கு 19 லட்சத்து 27 ஆயிரத்து 783 வாக்குகள்தான் கிடைத்தது. இது மொத்த வாக்கில் 5.23 சதவீதமாகும். ஒரு கட்சி அங்கீகாரம் பெற வேண்டுமானால் 6 சதவீதம் ஓட்டுக்கள் பெற்றிருக்க வேண்டும். அல்லது மொத்த எம்.எல்.ஏக்களில் 3 சதவீத எம்.எல்.ஏக்களை பெற்றிருக்க வேண்டும். ஆனால் பா.ம.க. இரண்டிலுமே கோட்டை விட்டது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ம.க ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. இதன் காரணமாக பா.ம.க. மாநில கட்சி அங்கீகாரத்தை இழக்கிறது. இதனால் அதற்கு ஒதுக்கப்பட்ட மாம்பழ சின்னத்தையும் இழக்கிறது. அதே சமயத்தில் தே.மு.தி.க.வுக்கு மாநில அங்கீகாரம் கிடைத்துள்ளது. சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் 41 தொகுதிகளில் போட்டியிட்டு 29 தொகுதிகளில் வெற்றி பெற்று மொத்த ஓட்டுக்களில் 7.88 சதவீதம் பெற்றுள்ளது. இது தவிர அ.தி.மு.க. வுக்கு அடுத்த பெரிய கட்சியாக உருவெடுத்து எதிர்க்கட்சி அந்தஸ்தையும் பெற்றுள்ளது. தி.மு.க.வை 3 வது இடத்திற்கு தள்ளியுள்ளது. இதன் மூலம் தே.மு.தி.க. அரசியல் அங்கீகாரம் பெற்று நிலையான சின்னத்தையும் பெற்றுள்ளது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்