முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இஸ்ரேலுடன் உறவு நரசிம்மராவுக்கு காங்கிரசார் எதிர்ப்பு தெரிவித்தனர் அத்வானி

ஞாயிற்றுக்கிழமை, 22 மே 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி,மே.- 23 - முஸ்லீம்கள் ஓட்டுக்கள் கிடைக்காமல் போய்விடும் என்ற எண்ணத்தில் இஸ்ரேலுடன் நரசிம்மராவ் காலத்தில் உறவு வைத்துக்கொள்ள காங்கிரசார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் என்று எல்.கே. அத்வானி திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார். அரபு நாடுகளை சமாளித்துக்கொண்டு முன்னேறி வரும் நாடுகளில் இஸ்ரேலும் ஒன்றாகும். யூதர்களை அதிகமாகக் கொண்ட அந்த நாடு ஒரு குட்டி நாடாக இருந்தாலும் விவசாயம், விஞ்ஞானம், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்குகிறது. அந்த நாட்டுடன் உறவை வளர்த்துக்கொள்ள நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது முயற்சி செய்தார். ஆனால் இஸ்ரேலுடன் உறவை வளர்த்துக்கொண்டால் இந்தியாவில் உள்ள முஸ்லீம்கள் காங்கிரசுக்கு எதிராக ஓட்டுப்போட நேரிடும் என்று நரசிம்மராவை காங்கிரசார் எச்சரித்தனர். அப்படி இருந்தும் இஸ்ரேலுடன் நரசிம்மராவ் உறவை வளர்த்துக்கொண்டார். இது பாராட்டுக்குரியது என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி கூறினார். அதன் பின்னர் வாஜ்பாய் பிரதமராக பொறுப்பு ஏற்றார். அந்த காலத்தில் இஸ்ரேலுடன் நாங்கள் நல்ல உறவை பேணி வந்தோம் என்றார். கடந்த 1992-ம் ஆண்டு நான் அமெரிக்காவுக்கு சென்றிருந்தேன். அப்போது அங்கு வசிக்கும் யூதர்கள், இந்தியா ஏன் இன்னும் இஸ்ரேலுடன் தூதரக உறவை வைத்துக்கொள்ளவில்லை என்று கேட்டார்கள். அதற்கு நான், இஸ்ரேலுடன் உறவு வைத்துக்கொள்ள நாங்கள் விரும்புகிறோம். ஆனால் பாரதிய ஜனதா ஆட்சியில் இல்லை என்றேன். இந்தியாவில் நீண்டகாலம் ஆட்சியில் இருந்த காங்கிரஸ், இஸ்ரேலுடன் உறவு வைத்துக்கொள்ள எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கம்யூனிஸ்ட் கட்சிகளும் அதேமாதிரி என்றும் பதில் அளித்தேன் என்றும் அத்வானி மேலும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்