முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இரவில் மின் துண்டிப்பு கூடாது அமைச்சர் வேலுமணி கட்டளை

திங்கட்கிழமை, 23 மே 2011      இந்தியா
Image Unavailable

கோவை,மே.- 23 - தமிழக திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் என்.பி. வேலுமணி நேற்று காலை ரயில் மூலம் கோவை வந்தார். பின்னர் அவர் மின்வாரிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் எம்.எல்.ஏக்கள் மலரவன், சேலஞ்சர் துரை, ஓ.கே. சின்னராஜ், முத்துகருப்பணன்சாமி, தாமோதரன், ஆறுக்குட்டி, சுகுமார் எம்.பி. ஆகியோரும் மின்வாரிய அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் அமைச்சர் வேலுமணி பேசியதாவது,
தமிழக முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தை மின்வெட்டே இல்லாத மாநிலமாக உருவாக்க வேண்டும் என்று உறுதி கூறியுள்ளார். தமிழக மக்களும் பெருவாரியான ஆதரவை அவருக்கு தந்துள்ளனர். ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் முன்பு 2 முதல் 3 மணி நேரம் மின்வெட்டு இருந்தது. தற்போது இரவு நேரங்களிலும் 2 மணி நேரம் மின்வெட்டு ஏற்படுவதாக புகார்கள் வந்துள்ளது.
இரவு நேரங்களில் மின்வெட்டு கண்டிப்பாக இருக்கக் கூடாது. ஆழியாறு, குறிச்சி, குனியமுத்தூர், கூட்டு குடிநீர் திட்டம், மின் சப்ளை துண்டிக்கப்படுவதால் குடிநீர் பிரச்சினை ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகிறார்கள். இதை மின்வாரியம் கருத்தில் கொண்டு குடிநீர் சரியான முறையில் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். குப்பை மூலம் மின் உற்பத்தி எடுக்க தனியார் பரிந்துரை செய்தால் அதனை உடனே தெரிவிக்க வேண்டும். எங்கள் நோக்கமே மின்வெட்டு இல்லாத மாவட்டமாக, மாநிலமாக மாற்ற வேண்டும் என்பதுதான். எனவே மின்வாரிய அதிகாரிகள் அதற்கான நடவடிக்கைகளில் உடனடியாக இறங்க வேண்டும் என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்