முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கனிமொழி, இன்று ஜாமீன் மனுத்தாக்கல்

திங்கட்கிழமை, 23 மே 2011      இந்தியா
Image Unavailable

புது டெல்லி,மே.- 23 - டெல்லி ஐகோர்ட்டில் கனிமொழி சார்பில் இன்று ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்யப்படுகிறது.  ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தி.மு.க. எம்.பியும், கருணாநிதியின் மகளுமான கனிமொழியின் ஜாமீன் மனு கடந்த 20 ம் தேதி சி.பி.ஐ. கோர்ட்டில் நிராகரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அன்று கோர்ட்டுக்கு வந்திருந்த கனிமொழி கைது செய்யப்பட்டு டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அவருக்கு முதல் வகுப்பு கொடுக்கப்பட்டது.
நேற்று முன்தினம் கனிமொழி கோர்ட்டுக்கு வந்த போது அவரது தாயார் ராஜாத்தி அம்மாள், மகன் ஆதித்யா, கணவர் அரவிந்தன் மற்றும் உறவினர்கள் சிலர் கனிமொழியை சந்தித்து பேசினர். ராஜாத்தி அம்மாளை கட்டித் தழுவிய போது இருவரும் கண்கலங்கினர். கனிமொழி மனதில் இருந்த இறுக்கத்தையும் அப்போது காண முடிந்தது. ஆஜராகி விட்டு கனிமொழி மீண்டும் திஹார் சிறைக்கு செல்லும் போது அவரை பார்த்து ராஜாத்தி அம்மாள் மீண்டும் கண்ணீர் விட்டு அழுதாராம்.
கனிமொழி ஜாமீன் மனு சி.பி.ஐ. கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் அப்பீல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்று டெல்லி ஐகோர்ட்டில் அப்பீல் மனு தாக்கல் செய்யப்படுகிறது. இதற்கான நடவடிக்கைகளில் மூத்த வக்கீல்கள் ஈடுபட்டுள்ளனர். ஸ்பெக்ட்ரம் வழக்கில் இதுவரை கைதான யாருக்கும் சி.பி.ஐ. கோர்ட் ஜாமீன் வழங்கவில்லை. அவர்களும் ஐகோர்ட்டில் அப்பீல் செய்துள்ளனர். ஆனால் அங்கு மனுக்கள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்