முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லோக்பாலுக்கு உறுப்பினர்களை நியமனம் செய்ய நடவடிக்கை

வெள்ளிக்கிழமை, 24 ஜனவரி 2014      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி,ஜன.25 - லோக்பால் மற்றும் லோக்பால் ஆயுக்தாவுக்கு உறுப்பினர்களை நியமிக்கும் நடவடிக்கையை எடுக்க மத்திய அதிகாரிகள் நலத்துறை எடுத்துள்ளது. 

நாட்டில் ஊழலை ஒழிக்க வகை செய்யும் லோக்பால், மற்றும் லோக்ஆயுக்தா சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேறியது. இதற்கு மத்தியில் அமைக்கவிருக்கும் லோக்பால் அமைப்புக்கு 10 உறுப்பினர்களும் மாநிலங்களில் அமைக்கப்படும் லோக்ஆயுக்தா அமைப்புகளுக்கு தலா 10 உறுப்பினர்களும் நியமிக்கப்பட வேண்டும். லோக்பால் அமைப்புக்கு 10 உறுப்பினர்களில் 5 பேர் நீதித்துறையில் இருந்தும் மீதமுள்ள 5 பேர் நீதித்துறை இல்லாத பிறதுறைகளில் இருந்து 5 உறுப்பினர்களும் அமைக்க வேண்டும். இதில் பாதிப்பேர் எஸ்.சி.,எஸ்.டி., பிற்பட்டோர், மைனாரிட்டி வகுப்புகளை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். அதேமாதிரி லோக் ஆயுக்தா அமைப்புகளுக்கும் உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும். இந்த நியமனம் குறித்து விண்ணப்பங்களை வரவேற்குமாறு சுப்ரீம்கோர்ட்டு பதிவாளர், ஐகோர்ட்டு பதிவாளர்கள், மாநில தலைமை செயலாளர்களுக்கு மத்திய அதிகாரிகள் நலத்துறை அமைச்சகம் தனித்தனியாக கடிதம் எழுதியுள்ளது. 

  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்