முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா - நியூசி., மோதிய 3வது ஒரு நாள் போட்டி டிரா

சனிக்கிழமை, 25 ஜனவரி 2014      விளையாட்டு
Image Unavailable

 

ஆக்லாந்து, ஜன. 26 - இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே ஆக்லாந்தில் நேற்று நடைபெற்ற 3_வது ஒரு நாள் போட்டி டிராவில் முடிவடைந்தது. 

இந்தப் போட்டியில் கடைசி கட்டத்தில் ஆல்ரவுண்டர் ஜடேஜா புத்திசாதுர்யமாக விளையாடியதால் ஆட்டம் டிராவானது. அவர் அரை சதம் அடித்து இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். 

நியூசிலாந்து அணியின் துவக்க வீரரானமார்டின் குப்டில் சதம் அடித்தது ஆட்டத்தின் சிறப்பம்சமாகும். அவருக்கு பக்கபலமாக ஆடிய வில்லியம்சன் அரை சதம் அடித்தார். 

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய 3_வது ஒரு நாள் போட்டி இந்திய நேரப்படி காலை 6.30 மணிகக்கு தொடங்கியது. 

முதல் 2 போட்டியில் தோல்வி அடைந்த இந்திய அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி இருந்தது. 

இந்திய அணியில்ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. இஷாந்த் சர்மா நீக்கப்பட்டு அவருக்குப்பதிலாக வருண் ஆரோன் சேர்க்கப்பட்டார். 

இதே போல நியூசிலாந்து அணியிலும் ஒரு மாற்றம் செய்யப்பட்டது. முன்னணி வேகப் பந்து வீச்சாளரான மில்ஸ் நீக்கப்பட்டு  அவருக்குப் பதிலாக பென்னட் சேர்க்கப்பட்டார். 

இந்தப் போட்டியில் முதலில் களம் இறங்கிய நியூசிலாந்து அணி 50 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 314 ரன் எடுத்தது. 

நியூசிலாந்து அணி தரப்பில்துவக்க வீரர்குப்டில் சதம் அடித்தார். இது அவருக்கு 5_வது சதமாகும். அவர் 129 பந்தில் 111 ரன் எடுத்தார். இதில் 12பவுண்டரி, 2 சிக்சர் அடக்கம். 

தவிர, வில்லியம்சன் 74 பந்தில் 65 ரன் எடுத்தார். ரோஞ்சி 38 ரன்னையும், சௌதி 27 ரன்னையும், ரைடர் 20 ரன்னையும் எடுத்தனர். மொகமது ஷமி, ஜடேஜா தலா 2 விக்கெட் எடுத்தனர். 

315 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 314 ரன்னை எடுத்தது. 

ஆல்ரவுண்டர் ஜடேஜா இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்தது குறிப்பிடத்தக்கது. அவர் 65 ரன்னை எடுத்து இருந்தார். இரு அணிகளும் ஒரே ஸ்கோரை எடுத்து இநந்ததால் ஆட்டம் டிராவானது. நியூசி. அணி 2_ 0 என்ற முன்னிலையில் உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்