முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதியில் 14 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

திங்கட்கிழமை, 23 மே 2011      ஆன்மிகம்
Image Unavailable

திருமலை, மே. - 23  - திருப்பதியில் 14 மணி நேரம் காத்திருந்து ஏழுமலையானை பக்தர்கள் தரிசனம் செய்கிறார்கள். கோடை விடுமுறையால் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது.  இதுபற்றிய விபரம் வருமாறு -  திருமலை - திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க நாடு முழுவதும் மட்டுமின்றி பல்வேறு வெளிநாடுகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். சாதாரண விடுமுறை நாட்களிலேயே அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள். தற்போது கோடை விடுமுறை என்பதால் பக்தர்கள் வருகை அதிகரித் துள்ளது. இதனால் லட்சக்கணக்கானோர் திருமலையில் சுவாமி தரிச னத்திற்காக காத்துள்ளனர். எனவே திருப்பதி தேவஸ்தானம் திணறி வருகிறது.
இவர்களில் பெரும்பாலானோர் தங்கும் அறைகள் கிடைக்காமல் மண்டபங்களிலும், பிளாட்பாரங்களிலும் குழந்தை மற்றும் முதியவர் களுடன் தங்கியுள்ளனர். அங்கு தங்கும் அறைகள் ஏற்கனவே புக்காகி விட்டன.
ஏழுமலையானை தரிசிக்க நேற்று முன் தினம் காலை முதல் பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால், வைகுண்டம் கியூ காம்ப்ளக்சுகள் அனைத்து ம் நிரம்பி சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் காத்திருந்தனர்.
இதே போல, அன்னதான சத்திரம், முடி காணிக்கை செலுத்துமிடம் ஆகியவற்றிலும் கணிசமான கூட்டம் காணப்பட்டது. நேற்று முன் தினம் அதிகாலை 3 மணி முதல் இரவு 1 மணி வரை மொத்தம் ஒரு லட்சத்து 41 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ததாக தேவஸ்தானம் தெரி வித்துள்ளது.  
தர்ம தரிசன பக்தர்கள் 14 மணி நேரம், ரூ. 50, ரூ. 300 கட்டணம் செலுத் தியவர்கள் சுமார் 7 மணி நேரம், நடைபாதை வழியாக வந்த பக்தர்க ள் 3 மணி நேரமும் காத்திருந்து ஏழுமலையானை தரிசித்தனர். நேற்று அதிகாலையிலும் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சுகள் பக்தர்கள் வெள்ளத்தால் நிரம்பி காணப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்