முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மருத்துவமனையில் மனித வெடிகுண்டு தாக்குதல்: டாக்டர்கள் 6 பேர் பலி

திங்கட்கிழமை, 23 மே 2011      உலகம்
Image Unavailable

காபூல்,மே.- 23 - மருத்துவமனையில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தியதில் பயிற்சி டாக்டர்கள் 6 பேர் இறந்தனர். 23 பேர் காயமடைந்தனர்.  ஆப்கானிஸ்தான் நாட்டில் அமெரிக்க ஆதரவுடன் நடந்து வரும் அதிபர் கர்சாய் அரசுக்கு எதிராக தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அவர்களை ஒடுக்க அமெரிக்க ராணுவமும் ஆப்கானிஸ்தான் அரசும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்த நிலையில் தலைநகர் காபூலில் உள்ள ராணுவ மருத்துவமனைக்குள் மனித வெடிகுண்டு தீவிரவாதி ஒருவர் புகுந்தார். திடீரென்று அவர் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்க செய்தார். குண்டு பயங்கர சப்தத்துடன் வெடித்து சிதறியதில் பயிற்சி டாக்டர்கள் 6 பேர் உடல் சிதறி இறந்தனர். மேலும் பயிற்சி டாக்டர்கள் நோயாளிகள் உட்பட 23 பேர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்