முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நியூசி., எதிரான 3-வது போட்டி: பந்து வீசும் முடிவு சரியானதே

ஞாயிற்றுக்கிழமை, 26 ஜனவரி 2014      விளையாட்டு
Image Unavailable

 

ஆக்லாந்து, ஜன. 27 - நியூசிலாந்திற்கு எதிரான 3_வது ஒரு நாள் போட்டியில் சிறப்பாக ஆடிய அஸ்வின் மற்றும் ஜடேஜாவிற்கு கேப்டன் தோனி பாராட்டு தெரிவித்தார். 

மேலும் இந்தப் போட்டியில் எடுக்கப்பட்ட முதலில் பந்து வீசும் முடிவு சரியானதே என்றும் அவர் தனது நிலைப்பாட்டை உறுதிப் படுத்தி இருக்கிறார். 

இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதிய 3_வது ஒரு நாள் போட்டி எந்த அணிக்கும் வெற்றி தோல்வி இன்றி டிராவில் முடிந்தது. 

இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி 314 ரன் குவித்து ஆல் அவுட் ஆனது. குப்தில் 111 ரன்னும் வில்லியம்சன் 65 ரன்னும் எடுத்தனர். 

பின்னர் விளையாடிய இந்திய அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 314 ரன் எடுத்தது. ஒரு கட்டத்தில் இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 184 ரன் என்ற நிலையில் இருந்தது. 

அஸ்வின், ஜடேஜா சிறப்பாக ஆடினார்க ள். கடைசி ஓவரை ஜடேஜா போராடி அணியை தோல்வியில் இருந்து காப்பாற் றினார். 

கடைசி ஓவரில் அவர் அபாரமாக ஆடினார். அவரது அபாரமான ஆட்டத்தால் போட்டி இறுதியில் டிராவில் முடிவடைந்தது. அவர் 45 பந்தில் 66 ரன் எடுத்து (5 பவுண்டரி, 4 சிக்சர்) ஆட்டம் இழக்காமல் இருந்தார். 

அஸ்வின் 45 பந்தில் 65 ரன்னும் (8 பவுண்டரி, 1 சிக்சர்), தோனி 50 ரன்னும் (2 பவுண்டரி, 3 சிக்சர்), எடுத்தனர். கோரி ஆண்டர்சன் 5 விக்கெட் கைப்பற்றினார். 

இதுவரை நடந்த 3 போட்டியிலும் தோனி தான் டாஸ் வென்றார். ஆனால் 3 முறையும் முதலில் பௌலிங்கை தான் தேர்வு செய்தார். இது சரியான முடிவு தான். மோசமானதுஅல்ல என்று அவர் தெரிவித்தார். 

இது குறித்து தோனி கூறியதாவது _ முதலில் பேட்டிங் செய்தால் 300 ரன்னுக்கு மேல் குவிப்போம் என்று எப்போது ம் கருதி விட முடியாது. 

2_வது பந்து வீசும் போது பௌலர்களுக்கு நெருக்கடி ஏற்படும். சில போட்டிகளை வைத்து நாம் எதையும் கருதிவிடக் கூடாது. 

ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்றவாறு முடிவுகள் எடுக்கப்படும். மிடில் ஓவரில் நாம் நிலைத்து நின்று ஆட முடியாததால் ரன் இலக்கை எட்ட முடியவில்லை. 

பேட்ஸ்மேன் என்ற முறையில் நானும், 48 _வது 49 _வது ஓவர் வரை களத்தில் இருந்து இருக்க வேண்டும். அஸ்வின், ஜடேஜாவி  

ன் ஆட்டம் சிறப்பாக இருந்தது. 

இந்த ஆட்டம் மூலம் ஜடேஜா தனது ஆட்டத்தில் முதிர்ச்சி பெற்று இருப்பார் என்று நம்புகிறேன். இந்த ஆட்டத்தில் வெற்றி பெற முடியாவிட்டாலும் டை ஆனது மகிழ்ச்சி தான். 

இனி வரும் ஆட்டங்களில் சிறப்பாக ஆடி தொடரை சமன் செய்ய போராடுவோம். இவ்வாறு அவர் தெரிவித்து இருக்கிறார். 

5 போட்டி கொண்ட தொடரில் இந்தியா 0_2 என்ற கணக்கில் பின்தங்கி உள்ளது. இரு அணிகள் மோதும் 4_வது போட்டி 

ஹேமில்டனில் வருகிற 28_ம் தேதி நடக்கிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்