ஐ.பி.எல். :எஸ். தவானின் அதிரடி ஆட்டத்தால் டெக்கான் சார்ஜர்ஸ் அபார வெற்றி

திங்கட்கிழமை, 23 மே 2011      விளையாட்டு
Shikhar Dhawan

தர்மசாலா, மே. - 23 - இந்தியன் பிரீமியர் லீக் 20 -க்கு 20 போட்டியில் தர்மசாலாவில் நடைபெற்ற ஆட்டத்தில் டெக்கான் சார்ஜர்ஸ் அணி 82 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியை வீழ்த்தி இந்தத் தொடரில் முன்னி லை பெற்று உள்ளது. இந்தப் போட்டியில் டெக்கான் அணி தரப்பில், துவக்க வீரர் எஸ். தவான் அதிரடியாக ஆடி, அணிக்கு சிறந்த அடித் தளத்தை அமைத்துக் கொடுத்தார். அவருக்கு பக்கபலமாக, ரவி டேஜா ஆடினார். இதனா ல் அந்த அணி கெளரவமான ஸ்கோரை எட்டியது.
பின்பு பெளலிங்கின் போது, முன்னணி சுழற் பந்து வீச்சாளரான ஏ. மிஸ்ரா அபாரமாக பந்து வீசி 4 முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். அவருக்கு ஆதர வாக கிறிஸ்டியன், டுமினி, ஸ்டெயின் மற்றும் ஓஜா ஆகியோர் பந்து வீசினர்.
ஐ.பி.எல். டி - 20 போட்டியில் இமாசல பிரதேச மாநிலத்தில் தர்மசா லாவில் உள்ள இமாசல பிரதேச கிரிக்கெட் சங்க அரங்கத்தில் 67 - வது லீக் ஆட்டம் நடந்தது. இதில் கில்கிறிஸ்ட் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியும், கேப்டன் கிரேக் ஒயிட் தலைமையிலான டெக்கான் சார்ஜர்ஸ் அணியும் மோதின .
முன்னதாக இதில் டாசில் வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணி பீல்டிங் செய்ய தீர்மானித்தது. டெக்கான் சார்ஜர்ஸ் தரப்பில், எஸ். தவான் மற்றும் ரவிடேஜா இருவரும் ஆட்டத்தை துவக்கினர்.
முதலில் களமிறங்கிய டெக்கான் அணியின் துவக்க வீரர்கள் அதிரடி யாக ஆடி ரன்னைக் குவித்தனர். இதனால் அந்த அணி சவாலான ஸ்கோரை எட்டியது குறிப்பிடத்தக்கது.
டெக்கான் அணியின் துவக்க வீரரான எஸ்.தவான் 5 ரன் வித்தியாசத்தி ல் சத வாய்ப்பை நழுவவிட்டது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்த து. அவர் 57 பந்தில் 95 ரன்னை எடுத்து இறுதிவரை ஆட்டம் இழக்காம ல் இருந்தார். இதில் 14 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடக்கம்.
அவருடன் இணைந்து ஆடிய ரவிடேஜா, 41 பந்தில் 60 ரன்னை எடுத் தார். இதில் 5 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் அடக்கம். இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 131 ரன்னைச் சேர்த்து அணிக்கு வலு சேர்த்த னர். தவிர, ஒயிட் 15 ரன்னையும், டுமினி 12 ரன்னையும் எடுத்தனர்.
பஞ்சாப் கிங்ஸ் சார்பில், வல்தாட்டி 24 ரன்னைக் கொடுத்து 1 விக்கெ ட் எடுத்தார். ஹாரிஸ் 35 ரன்னைக் கொடுத்து 1 விக்கெட் எடுத்தார். பிரவீன் குமார், பாட், சாவ்லா மற்றும் மெக்லாரன் ஆகியோருக்கு விக்கெட் கிடைக்கவில்லை.
பஞ்சாப் கிங்ஸ் 119 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக் கை டெக்கான் அணி வைத்தது. அடுத்து களம் இறங்கிய அந்த அணி 19 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 116 ரன்னில் சுருண்டது.
இதனால் டெக்கான் சார்ஜர்ஸ் அணி தர்மசாலாவில் நடைபெற்ற இந் த லீக்கில் 82 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற் றியின் மூலம் அந்த அணிக்கு 2 புள்ளிகள் கிடைத்தது.
பஞ்சாப் அணி தரப்பில், கேப்டன் கில்கிறிஸ்ட் அதிகபட்சமாக, 37 பந்தில் 51 ரன்னை எடுத்தார். இதில் 6 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் அடக் கம். இறுதியில், அவர் கிறிஸ்டியன் வீசிய பந்தில் ஒயிட்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
கேப்டனுக்கு அடுத்தபடியாக, சாவ்லா (13) மற்றும் டி. கார்த்திக் (11) இருவர் மட்டுமே இரட்டை இலக்க எண்ணைத் தொட்டனர். மற்ற வீர ர்கள் குறைந்த் ரன்னில் ஆட்டம் இழந்தனர். இதனால் அந்த அணி தோல்வியைத் தழுவியது.
டெக்கான் அணி சார்பில், ஏ.மிஸ்ரா 9 ரன்னைக் கொடுத்து 4 விக்கெட்வீழ்த்தினார். தவிர, கிறிஸ்டியன், டுமினி, ஸ்டெயின் மற்றும் ஓஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக எஸ். தவான் தேர்வு செய்யப்பட்டார். 

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: