பாக்.கில் வெடிகுண்டுடன் விளையாடிய 6 குழந்தைகள் பலி

Image Unavailable

 

இஸ்லாமாபாத், ஜன. 28 - பாகிஸ்தானில் பொம்மை என்று நினைத்து வெடிகுண்டுடன் விளையாடிய 6 குழந்தைகள் உடல் சிதறி பலியானார்கள். 

பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள ஹன்கு மாவட்டத்தில் பாபர் மேளா என்ற இடத்தில் நேற்று முன் தினம் (ஞாயிற்றுக் கிழமை) விடுமுறை தினம் என்பதால் தெருவில் குழந்தைகள் சிலர் விளையாடிக் கொண்டிருந்தனர். 

அப்போது அவர்கள் விளையாடிய இடத்தின் அருகே கையெறி குண்டு ஒன்று கிடந்துள்ளது. அதை குழந்தைகள் பொம் மை என கருதி எடுத்து வந்து விளையா டினர். 

எதிர்பாராத விதமாக அந்த வெடிகுண்டு வெடித்தது.  இதில் சம்பவ இடத்திலேயே 6 குழந்தைகள் பலியாயினர். இவர்கள் 12 வயதுக்கும் குறைவானவர்கள். 

இது குறித்து அப்பகுதி போலீஸ் அதிகாரி இப்திகார் அகமது கூறுகையில், இப்பகுதியில் கடந்த 2007 _ம் ஆண்டு முதல் தலிபான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். 

அடிக்கடி தாக்குதல் நடக்கும் பகுதி என்பதால் வெடிக்காமல் விழுந்த குண்டு ஒன்றை குழந்தைகள் பந்து என நினைத்து விளையாடி உயிரிழந்துள்ளனர். 

அவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர் கள் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று அந்த அதிகாரி கூறினார். 

கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளியை தாக்க வந்த தீவிரவாதியை தடுத்த பள்ளி மாணவன் ஒருவன் உயிரிழந்தான் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ