தாய்லாந்தில் எதிர்க் கட்சித் தலைவர் கொலை

Image Unavailable

 

பாங்காங், ஜன.28 - தாய்லாந்தில் நடந்த கலவரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சுதின் சுட்டுக்கொல்லப்பட்டார். தாய்லாந்தில் பிரதமர் யிங்லக் பதவி விலகக்கோரி எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இங்கு வரும் 2_ம் தேதி பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. 

பாங்காங் உள்ளிட்ட சில பகுதிகளில் முன்கூட்டியே தேர்தல் நடைபெற்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தினர். வாக்குச் சாவடிகளில் மறியல் செய்து வாக்களிக்க விடாமல் தடுத்தனர். இதனால் வன்முறை ஏற்பட்டது. பாங்காங்கில் ஒரு வாக்குச் சாவடியில் பலர் போ"ட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதில் எதிர்க்கட்சித் தலைவர் சுதின் தராதின் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்ததில் உயிரிழந்தார். 11பேர் காயமடைந்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ