நர்த்தகி - திரைவிமர்சனம்

raj8 0

ஒரு திருநங்கையின் மூன்று விதமான காலகட்டத்தையும், திருநங்கைகள் படும் துயரங்களையும் சித்தரிக்கும் கமர்ஷியல் படம்.  சிலம்ப வாத்தியாரின் மகன் அஸ்வின். சிறுவயதிலிருந்தே தாயின் பரதநாட்டியத்தை பார்த்து வளர்கிறான். ப்ளஸ் டூ படிக்கும்போது அவனுக்குள் ஒருத்தி' இருப்பதை உணர்கிறான். யாருக்கும் தெரியாமல் சகோதரியின் ஆடைகளைப் போட்டு பார்ப்பது, கண்களுக்கு மை தீட்டி ரசிப்பது என்று பெண்களுக்குரிய செயல்களில் அதிகமாக ஈடுபடுகிறான். தன்னைச் சுற்றி வரும் மாமன் மகளை விரும்பாமல், தன்னுடன் பழகும் நண்பனிடம் நேசம் காட்டுகிறான். இதனால் சக மாணவர்களின் கிண்டல், கேலிக்கு ஆளாகிறான். தன் மகன், தன்னைப்போல சிலம்ப வீரனாக வருவான் என்று நினைத்த தந்தை, அஸ்வினின் மாற்றத்தைக் கண்டு அதிர்ந்து போவதோடு, அவனை அடித்து விரட்டவும் செய்கிறார்.
ஊரை விட்டு வெளியேறும் அஸ்வின், திருநங்கை ப்ரியாவின் உதவியால் மும்பைக்குச் சென்று, அங்குள்ள திருநங்கைகளுடன் பழகி, அவர்களது உதவியுடன் அறுவை சிகிச்சை மேற்கொண்டு பெண்ணாக மாறுகிறான். மும்பையில் இருந்தால் விபச்சாரத்திற்கு ஆளாக நேரிடும் என்பதால் திருநங்கை அஸ்வின் பழகிய நடன வாத்தியார் உதவியோடு திருவையாறு திரும்புகிறாள். அங்கு பரதநாட்டிய மேதை கிரிஷ் கர்நாட் உதவியால் நாட்டியத்தில் சிறந்து விளங்குகிறாள். திருநங்கை அஸ்வின் ஒருவனை காதலித்து, திருமணம் செய்துகொண்டு குடும்பம் நடத்துகிறாள். அவனோ அவளை கழற்றிவிட்டு கம்பி நீnullட்டி விடுகிறான். தன் கணவனால் ஏமாற்றப்பட்டதை அறிந்து, காதல் வலியை மறக்க முடியாமல் சொந்த கிராமத்திற்குச் செல்கிறாள். அங்கு அவளுக்கு மேலும் அதிர்ச்சியூட்டும் தகவல் ஒன்று  தெரியவருகிறது.  அது என்ன? என்பது பரபரப்பான க்ளைமாக்ஸ் காட்சி!
 இப்படம் திருநங்கைகள் படும் பாட்டையும், பிறகு காதல், கல்யாணம் என்று வரும்போது அவர்களுக்கு ஏற்படும் வலிகளையும் அழுத்தமாக பதிவு செய்துள்ளது. அஸ்வின் தனது மாமன் மகளிடம் இருந்து விலகும்போதும், நண்பர்களால் அவமானப்படும்போதும், தந்தையிடம் அடிவாங்கும்போதும் அந்தப் பாத்திரத்தை உணர்ந்து நன்றாக நடித்திருக்கிறார். திருநங்கை கல்கியின் காதலும், ஏமாற்றமும் பரிவுகளை அள்ளுகிறது.
சிலம்ப வாத்தியாராக நடித்திருக்கும் கராத்தே வெங்கடேஷ், அவரது மனைவியாக வரும் சூசன் ஆகியோர் சரியான தேர்வு. சோப்பு மாமாவாக வரும் வி.கே.ஆர்.ரகு சென்டிமென்ட் காட்சிகளில் கலக்கி இருக்கிறார். அவரது மகளாக வரும் லீமா பாடல் காட்சியிலும், வேதனைப்படும் காட்சிகளிலும் மனதைத் தொடுகிறார். கேசவனின் ஒளிப்பதிவில் அந்த ஆற்றங்கரையும், பழைய கோவில்களும் மனதை விட்டு அகலவில்லை. ஜி.வி.பிரகாஷ்குமார் இசையில் நா. முத்துக்குமார் எழுதியுள்ள பாடல்கள் படம் முடிந்து வெளியே வந்த பின்னும் காதுகளில் ரீங்காரமிடுகிறது. யாரும் கையில் எடுக்கத் துணியாத ஒரு கதையை எடுத்து அதை உணர்வுnullர்வமான, யதார்த்தமான காட்சிகளோடும், மனதில் நிற்கும் சம்பவங்களோடும் சிறப்பாக இயக்கியிருக்கிறார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ