முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போக்குற்றம் பற்றி விசாரணை: வ.மாகாண கவுன்சில் தீர்மானம்

செவ்வாய்க்கிழமை, 28 ஜனவரி 2014      உலகம்
Image Unavailable

 

கொழும்பு, ஜன.29 - இலங்கை ராணுத்தின் போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட்ட வேண்டும் என்று கோரும் தீர்மாணத்தை அந்நாட்டின் வடக்கு மாகாணக் கவுன்சில் நிறைவேற்றியது.

இத்தகவலை வடக்கு மாகாணக் கவுன்சில் உறுப்பினரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தவருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், " தமிழர்களின் பிரச்னைகளைத் தீர்க்க  இலங்கை அரசு நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக மூன்று அம்சத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தங்களின் பிரச்னைகளைத் தீர்க்க இலங்கை அரசு அர்த்தமுள்ள நடவடிக்கை எதையும் எடுக்கும் என்ற நம்பிக்கை தமிழர்களுக்கு இல்லை. போர்க் குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த ஐ.நா. தலையீட்டை அவர்களின் கோருவார்கள் " என்று தெரிவித்தார். ஐ.நா. மனித உரிமை கவுன்சில் எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கைக்கு எதிரான அடுத்த தீர்மானம் கொண்டுவரப்பட உள்ள நிலையில், வடக்கு மாகாணக் கவுன்சில் மேற்கண்ட தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. முன்னதாக, இலங்கை போர்க் குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் வலியுறுத்தியிருந்தார். இந்நிலையில், வடக்கு மாகாண கவுன்சில் நிறைவேற்றியுள்ள தீர்மானம் குறித்து இலங்கை அரசின் மூத்த அமைச்சர்களில் ஒருவரான கசீல் பிரேமஜெயந்தாவிடம் செயதியாளர்கள் கேட்டனர். அதற்கு " தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இலங்கைக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டுள்ள மேலை நாடுகளின் ஏஜென்டுகளாகி விட்டன. நாடு முழுவதும் பிரபாகரன் குண்டு வெடிப்புகளை நிகழ்த்தியபோது அதை எதிர்த்து யாரும் குரல் கொடுக்கவில்லை. இப்போது நாங்கள் அதற்கு முடிவு கட்டி விட்டதால், இப்போது அனைவரும் சுதந்திரமாக கருத்து தெரிவித்து வருகின்றனர்." என்று அவர் பதிலளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்