ஜெர்மனியில் பொம்மை துப்பாக்கியை காட்டி கொள்ளை

Image Unavailable

 

பெர்லின், ஜன. 29 - ஜெர்மனியில் வாலிபர் ஒருவர் பொம்மை துப்பாக்கியை காட்டி வங்கியில் கொள்ளை யடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

ஜெர்மனியின் தெற்கு பகுதி பவாரியன் நகரில் உள்ள வங்கிக்கு 2 தினங்களுக்கு முன்பு 16 வயது வாலிபர் ஒருவர் சைக்கிளில் வந்தார். 

உள்ளே புகுந்த வாலிபர் தன்னிடம் இருந்த துப்பாக்கியை காட்டி வங்கி ஊழியர்களை மிரட்டினார். உயிருக்கு பயந்த ஊழியர்கள் கேஷ் கவுன்டரில் இருந்த பணத்தை அள்ளி அவரிடம் கொடுத்துள்ளனர் 

இதில் ஆயிரக்கணக்கான பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு சைக்கிளில் அந்த 16 வயது வாலிபர் தப்பிச் சென்றார். 

உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் வங்கிக்கு வந்த வாடிக்கையாளர் ஒருவர் தப்பிச் சென்ற வாலிபரை அவருக்கு தெரியாமல் காரில் பின் தொடர்ந்து சென்றார். 

சைக்கிளில் சென்ற ஆசாமி, ஜெர்மனியில் இருந்து ஆஸ்திரியாவுக்கு தப்ப முயன்றது தெரிய வந்தது. 

இதனையடுத்து எல்லையில் சோதனை நடத்திய போலீசார் ஆசாமியை மடக்கி பிடித்து கைது செய்தனர். 

விசாரணையில் வங்கியில் பொம்மை துப்பாக்கியை காட்டி மிரட்டி பணத்தை கொள்ளை அடித்தது தெரிந்தது. அவரிடம் இருந்து பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். 

பொம்மை துப்பாக்கியை காட்டி வாலிபர் ஒருவர் வங்கியில் கொள்ளையடித்த சம்பவம் ஜெர்மனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ