சென்னை, பிப்.24 - ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி வடசென்னை மாவட்ட செயலாளர் டி.ஜெயக்குமார், கே.எஸ்.சீனிவாசன் எம்.எல்.ஏ. ஆகியோர் தங்கதேர் இழுத்தனர்.
ஜெயலலிதாவின் 63-வது பிறந்தநாளையொட்டி நேற்று தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் ரத்ததானம், அன்னதானம், நலத்திட்ட உதவிகள் போன்ற ஏற்பாடுகளை செய்து ஏழை, எளியோர்களுக்கு வழங்கினார்கள்.
நேற்று காலை சென்னை பிராட்வேயில் உள்ள காளிகம்பாள் கோயிலில் வடசென்னை மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் கே.எஸ்.சீனிவாசன் எம்.எல்.ஏ. ஏற்பாட்டில் வடசென்னை மாவட்ட செயலாளர் டி.ஜெயக்குமார் மாவட்ட அவைத்தலைவர் வ.நீலகண்டன், மாவட்ட பொருளாளர் வெற்றிவேல் ஆகியோர் தங்கத்தேரை இழுத்தனர். இந்த விழாவில் துறைமுக பகுதி செயலாளர் பிரதாப்குமார், வசந்தகுமார், டி.எல்.ரவி, கருணாநிதி, சம்பத், பி.கே.மாரி, மாசிலமாணி, குணா, டி.டி.சேகர், லால்சந்த், ஹேமந்த்ராஜ், திருஞானம், தேரடிகணேசன், குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் 63 பேருக்கு இலவச வேட்டி சேலைகளையும், ஏழை, எளியவர்களுக்கு வழங்கப்பட்டது.
இதேபோல் சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் ஆலயத்தில் குமரி எஸ்.கோலப்பன் ஏற்பாட்டில் தென்சென்னை மாவட்ட செயலாளர் ஜி.செந்தமிழன், நடிகர் சரவணன், இயக்குனர் ஆர்.வி.உதயகுமார், தமிழ்மகன் உசேன் ஆகியோர் தங்கத்தேரை இழந்தனர்.
பின்னர் கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு இனிப்பு வழங்கினார்கள்.