முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நெல்லையில் கபடி போட்டி: அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்

புதன்கிழமை, 29 ஜனவரி 2014      விளையாட்டு
Image Unavailable

 

நெல்லை,ஜன.30 - நெல்லையில் அரசு போக்குவரத்து கழக நெல்லை கோட்ட கிளைகளுக்கிடையேயான நடந்த கபடி போட்டியை அமைச்சர்கள் ராஜாபி. செந்தூர்பாண்டியன், செந்தில்பாலாஜி ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர்.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 66வது பிறந்தநாளையொட்டி அரசு போக்குவரத்து கழக நெல்லை கோட்ட கிளைகளுக்கு இடையேயான கபடி போட்டி பாளை வ.உ.சி.மைதானத்தில் நேற்று நடந்தது. போட்டி துவக்க விழாவிற்கு தமிழக போக்குவரத்து துறை அமைச்சரும், கரூர் மாவட்ட கழக செயலாளருமான வி.செந்தில்பாலாஜி தலைமை தாங்கினார். நெல்லை மாநகர் மாவட்ட அவைத்தலைவர் பரணிஏ.சங்கரலிங்கம், பொருளாளர் தச்சைஎன்.கணேசராஜா, மண்டல சேர்மன்கள் நெல்லை மோகன், தச்சை மாதவன், பாளை பகுதி கழக செயலாளர் எஸ்.டி.காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நெல்லை அண்ணா தொழிற்சங்க மண்டல செயலாளர் வி.சி.வேல்பாண்டியன் வரவேற்று பேசினார். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ராஜாபி.செந்தூர்பாண்டியன் போட்டியை துவக்கி வைத்தார். இந்த போட்டியில் செட்டிக்குளம், குளச்சல், கன்னியாகுமரி, குழித்துறை, மார்த்தாண்டம், திங்கள்சந்தை, ராணித்தோட்டம், திருவட்டாறு, விவேகானந்தபுரம், நெல்லை பைபாஸ், கட்டபொம்மன்நகர், பாபநாசம், புளியங்குடி, சங்கரன்கோவில், செங்கோட்டை, தாமிரபரணி, தென்காசி, திசையன்விளை, வள்ளியூர், கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம், திருச்சனூர், தூத்துக்குடிநகர், தூத்துக்குடி புறநகர், விளாத்திகுளம் உள்ளிட்ட 28 அணிகளைச் சேர்ந்த வீரர்கள் விளையாடினர். குளச்சல், கன்னியாகுமரி அணிகளுக்கிடையே நடந்த போட்டியில் கன்னியாகுமரி அணியும், குழித்துறை, மார்த்தாண்டம் அணிகளுக்கிடையே நடந்த போட்டியில் மார்த்தாண்டம் அணியும், திங்கள்சந்தை, ராணித்தோட்டம் 1 அணிகளுக்கிடையே நடந்த போட்டியில் திங்கள்சந்தை அணியும் வெற்றிப்பெற்றன. பின்னர் முதல் மூன்று இடங்களை பிடித்த அணிகளுக்கு அமைச்சர்கள் ராஜாபி.செந்தூர்பாண்டியன், செந்தில்பாலாஜி ஆகியோர் பரிசுகளை வழங்கினர். விழாவில் அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் நாகர்கோவில் ராஜேந்திரன், சகாயராஜ், முருகேசன்,  நெல்லை மண்டல பொருளாளர் பொன்னுராஜ், தலைவர் இளஅரசு, மாநகர அ.தி.மு.க.இணைச்செயலாளர் வசந்திமுருகேசன், மாணவரணி செயலாளர் கே.ஜே.சி.ஜெரால்டு, நிர்வாகிகள் பாளைகே.சரவணன், கணபதிசுந்தரம், ஜோதிபரமசிவன், சிந்துமுருகன், கங்கைமுருகன், அக்ரோ சேர்மன் மகபூப்ஜான், பாளை கூட்டுறவு நகர வங்கி செயலாளர் டால்சரவணகுமார், கே.டி.சி.நிர்வாக பணியாளர் சங்க செயலாளர் செல்வகணேசன், கவுன்சிலர்கள் ஆறுமுகம், முத்துலெட்சுமி, பேபிசுந்தர், பாளைசரவணன், குறிச்சிடி.சேகர், அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் பேச்சிமுத்து, பகவதிமுருகன், டி.டி.சி.ஜஹான், நவ்சாத், பொன்னுசாமி, சிலம்புசுந்தர், கராத்தேஸ்டீபன், உலகநாதன், முன்னாள் கவுன்சிலர் சாந்தி, ஆவின் அன்னசாமி,  ஓ.எம்.ஏ.ரசாக், தொண்டன் ஆறுமுகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்