முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹாக்கி விளையாட்டில் 1500 கோடிக்கும் அதிகமாக முதலீடு

புதன்கிழமை, 29 ஜனவரி 2014      விளையாட்டு
Image Unavailable

 

சென்னை, ஜன30: இந்தியாவின் முதன்மையான விளையாட்டு அலைவரிசை வலையமைப்பான ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஐ நிர்வகிக்கும் ஸ்டார் இந்தியா, அடுத்த 8 ஆண்டுகளில் ஹாக்கி விளையாட்டு மீது ரூ.1500 கோடிக்கும் அதிகமான தொகையை முதலீடு செய்ய பொறுப்புறதியை மேற்கொண்டிருக்கிறது.

இதுவரை இந்த விளையாட்டு வரலாற்றில் இத்தகைய முதலீடு செய்யப்படாததால், ஹாக்கி விளையாட்டைப் பொறுத்தவரை உலகளவில் மிகப்பெரிய முதலீட்டாளராக ஸ்டார் இந்தியாவை இது உயர்த்தியிருக்கிறது. இதுவரை ஒருபோதும் காட்டப்படாத ஆர்வத்தையும், பொறுப்புறுதியையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஹாக்கி மீது வெளிப்படுத்தியிருக்கிறது. ஹாக்கி இந்தியா மற்றும் சர்வதேச ஹாக்கி கூட்டமைப்புடன் சேர்ந்து இவ்விளையாட்டை முன்னிலைப்படுத்தி வளர்ப்பதற்கான பயணத்தை இது தொடங்கியிருக்கிறது. 

 

ஸ்டார் இந்தியாவின் விளையாட்டு வர்த்தக பிரிவின் தலைவர் நிதின் குக்ரேஜா, விளையாட்டு உலகை சிறப்பாக மாற்றியமைப்பதும், இந்தியாவில் ஒன்றுக்கும் மேற்பட்ட பல விளையாட்டுகளின் கலாச்சாரத்தை வளர்ப்பதுமே எங்களது குறிக்கோளாகும். இந்தியாவில், விளையாட்டுகளை ஒளிபரப்பும் நிகழ்வுகள் கிரிக்கெட்டுகளில் மட்டுமே வழக்கமாக முதலீடு செய்திருக்கின்றனர் மற்றும் பிற விளையாட்டுகளில் அதிக முதலீடு செய்வதை தவிர்த்து வருகின்றனர். ஆனால் எங்களது இந்த முதலீடு ஒரு சரியான நடவடிக்கையாகும். வளர்ச்சிக்கான அனைத்து சாத்திய திறன்களையும் ஹாக்கி கொண்டிருக்கிறதென நாங்கள் நம்புகிறோம். ஆனால், இவை அனைத்தையும் ஒன்றாக இணைக்க சில முக்கிய அம்சங்கள் தேவைப்படுகின்றன. உயிரோட்டமுள்ள உள்நாட்டு லீக் போட்டிகள் மற்றும் 2018 ஹாக்கி உலகக் கோப்பை உட்பட இந்தியாவில் சர்வதேச போட்டிகள் மற்றும் உலகத்தரமான ஒளிபரப்பு செயல்பாடுகள் ஆகியவை இந்த விளையாட்டை பிரபலப்படுத்துவதற்கான அத்தியாவசிய அம்சங்கள் என்றும் எதிர்கால சேம்பியன்களை உருவாக்க இவை உதவும் என்றும் நாங்கள் நம்புகிறோம், என்று கூறினார்.

ஹாக்கி இந்தியா லீக்_ன் இரண்டாம் ஆண்டு நிகழ்வை ஒளிபரப்புவதன் மூலம் ஹாக்கி ஒளிபரப்பில் ஒரு புதிய உலகளாவிய தர அளவீட்டை உருவாக்க ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தயார் நிலையில் இருக்கிறது. 'ஹாக்கியின் புதிய முகத்தை' காட்சிப்படுத்துகின்ற ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இன்னும் 2 நாட்களில் தொடங்கவிருக்கிற 2வது பதிப்பின் தயாரிப்பு மற்றும் விளம்பரம் மீது 100 கோடிக்கும் அதிகமாக முதலீடு செய்திருக்கிறது. ஐபிஎல்_ஐ தவிர்த்து வேறு எந்த உள்நாட்டு அளவிலான லீக் போட்டிக்காக ஒரு ஒளிபரப்பு நிறுவனம் செய்திருக்கும் முதலீடு இதுவரை அறியப்படாத ஒன்றாகும். 

இந்நிகழ்ச்சியின்போது பேசிய இந்திய ஹாக்கி குழுவின் முன்னாள் கேப்டன் ரு. விரேன் ரஸ்குயின்ஹா, இந்த அளவிலான பெரிய முதலீடு, ஹாக்கி விளையாட்டை இந்தியாவில் மட்டுமல்லாது உலகெங்கிலும் சிறப்பாக பிரபலப்படுத்துவதற்கு பெரிதும் உதவும் என்பதில் ஐயமில்லை. நமது புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர்கள் சிலரைப் போலவே ஹாக்கியிலும் சில முன்மாதிரி நபர்கள் ஹீரோக்களை நாம் உருவாக்குவது முக்கியமானது, இந்திய ஹாக்கியில், கடந்து இரு ஆண்டுகளில் ஏராளமான மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஏராளமான முதலீடு வந்திருப்பது, வரவேற்கத்தக்க ஒரு செய்தியாகும். இதற்கு முன்னால், வெளிநாடுகளில் விளையாட பல்வேறு கிளப்புகளை இந்திய விளையாட்டு வீரர்கள் கஷ்டப்பட்டு தேடி அலையவேண்டியிருந்தது. இப்போது அதற்கு நேர் எதிரான விஷயம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. ஒரு குஐர் போட்டி மற்றும் ர்ர்ஐடு நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் நிகழ்வதால் சர்வதேச ஹாக்கியின் மையமாக இந்தியா உருவாவது நிச்சயம். இந்திய ஹாக்கியின் வளர்ச்சி மீது இதுவொரு ஆக்கபு+ர்வ தாக்கத்தை நிச்சயமாக உருவாக்கும். வரும் எதிர்காலத்தை பெருமைகலந்த மகிழ்ச்சியோடு மட்டுமே நான் எதிர்பார்க்க இயலும், என்று கூறினார்.

 

பாகிஸ்தான் ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் தாஹிர் ஸமான், கிரிக்கெட்_ஐ போலவே ஹாக்கியும் அதிகளவிலான சாத்தியத்திறனை, குறிப்பாக இத்துணைக்கண்டம் கொண்டிருக்கிறது. பாகிஸ்தான் மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுமே பலம் வாய்ந்த நாடுகளாக இருந்து வந்திருக்கின்றன. ஆனால், கிரிக்கெட் போன்ற வேறு சில விளையாட்டுகள் அதிவேக வளர்ச்சி பெற்றதால் ஹாக்கி பின்தங்கிவிட்டது. கடந்த காலத்தில் இந்த விளையாட்டின் மூலம் ஒருவரால் வாழ்க்கையை நடத்தமுடியாத நிலை இருந்தது என்பது இதற்கு ஒரு முக்கிய காரணமாகும். அத்துடன் இவ்விளையாட்டை அதன் மீது கொண்டிருந்த ஆழ்ந்த அன்பின் காரணமாகவே நாங்கள் விளையாடினோம். எனினும், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் போன்ற பெரு நிறுவனங்களின் விளையாட்டில் இப்போது செய்திருக்கும் முதலீடு மற்றும் ஹீரோ ஹாக்கி இந்தியா லீக் போன்ற உலகளாவிய லீக் போட்டிகள் ஆகியவற்றினால், இந்த விளையாட்டிற்கு ஒளிமயமான எதிர்காலத்தையே என்னால் பார்க்கமுடிகிறது. இவ்விளையாட்டின் முன்னேற்றத்திற்கு நல்லதாகவே இது இருக்கமுடியும். அடித்தல் அளவில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் ஒரு ஹாக்கி மட்டையை எடுத்து விளையாடவே விரும்புவார்கள். நீண்டநாள் அடிப்படையில் பார்க்கும்போது இவ்விளையாட்டிற்கு ஒரு ஒளிமயமான எதிர்காலத்தைத் தான் நான் எதிர்நோக்குகிறேன், என்று கூறினார்.

இந்த லீக் போட்டிக்கு முந்தைய மற்றும் பிந்தைய ஷோக்களுக்காக உலகத்தரமான ஒரு அரங்கத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் உருவாக்கியிருக்கிறது. ஆங்கில மொழி ஒளிபரப்புக்கான ஸ்டுடியோ குழுவானது, பிபிசி நிகழ்ச்சி நடத்துனர் மைக்கேல் அப்சலோம் தலைமையில் இயங்கும். ஹிந்தி ஒளிபரப்பிற்கு முதன்மை தொகுப்பாளராக வித்யா மல்வாட் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நியமனம் செய்திருக்கிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்