முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பார்லி., தேர்தல்: அமெரிக்கா உளவுத்துறை கணிப்பு

வியாழக்கிழமை, 30 ஜனவரி 2014      உலகம்
Image Unavailable

  

வாஷிங்டன், ஜன.31 - இந்தியாவில் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்று அமெரிக்க உளவுத் துறை அதிகாரி தெரிவித்துள்ளார். இந்த தேர்தல் தொடர்பாக எந்தக் கட்சி வெற்றிபெறும் யார் ஆட்சி அமைப்பார்கள் என்பது பற்றி கருத்து கணிப்பு நடைபெற்று வருகிறது.      

இதில் காங்கிரஸ் கட்சியை விட பா.ஜ.க.வுக்கு அதிக இடங்கள் கிடைக்கும். தனிப்பெரும் கட்சியாக பாஜக இருக்கும் என்றும், எந்தக்  கட்சிக்கும் பெரும்பா ன்மை கிடைக்காது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் நடைபெற உள்ள தேர்தலை அமெரிக்கா  உன்னிப்பாக கவனித்து வருகிறது. அமெரிக்க உளவுத்துறை இது தொடர்பாக தேர்தலுக்கு முந்தைய சர்வேயை நடத்தியது. இதுபற்றி அமெரிக்காவின் தேசிய உளவுத் துறை இயக்குநர் ஜேம்ஸ் கிலாப்பர் வாஷிங்டனில் நிருபர்களிடம் கூறியதாவது:

இந்தியாவில் கடந்த 1984_ம் ஆண்டுக்குப் பிறகு நடந்த தேர்தல்களில் எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்க வில்லை. கூட்டணி அரசுதான் ஆட்சி நடத்தி வருகிறது. இதே நிலைதான் 2014 தேர்தலிலும் நீடிக்கும் என்று நாங்கள் கணித்துள்ளோம். அரசியல் கட்சிகளின் எண்ணங்களும், ஒவ்வொரு மாதிரியான கொள்கைகளைக் கொண்டு இருக்கின்றன. எனவே எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது. 

இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கை யிலும், பொருளாதாரக் கொள்கையிலும்  மாற்றங்கள் வரலாம். தேர்தலுக்குப் பிறகு அமெரிக்காவுக்கு சாதகமான அம்சங்கள் பற்றி ஆய்வு செய்து வருகிறோம். எதிர்காலத்தில் எப்படி இருக்கும் என்பதை கணிக்க முடியாது. இந்தியாவில் 2005 முதல் 2012 வரை வளர்ச்சி விகிதம் 8 சதவீதமாக இருந்தது. 2014_ம் ஆண்டில் வளர்ச்சி விகிதம் 5 சதவீதம் அளவுக்கு உள்ளது என்று அவர் கூறினார்.  

இந்த தேர்தலில் பாஜகவும், காங்கிரஸ் கட்சியும் தேர்தல் கூட்டணி அமைப்பதில் தீவிரமாக ஆர்வம் காட்டி வருகின்றன.பிரதமர் வேட்பாளராக குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடியை  பாஜக அறிவித்துள்ளது. ஆனால் காங்கிரஸ் கட்சி பிரதமர் வேட்பாளரை இதுவரை அறிவிக்கவில்லை. தேர்தலில் வெற்றிபெற்றால்  ராகுல் காந்தி பிரதமராக வருவார் என்று கூறப்படுகிறது. காங்கி ரஸூக்கு ஆதரவாக சோனியா காந்தியின் மகள் பிரியங்கா களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்