முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போரில் சட்ட விரோதமான ஆயுதங்களை பயன்படுத்தவில்லை

வியாழக்கிழமை, 30 ஜனவரி 2014      உலகம்
Image Unavailable

 

கொழும்பு, ஜன.31 - இலங்கையில் விடுதலை புலிகளுக்கு எதிரான போரில் சட்ட விரோதமான ஆயுதங்களை பயன்படு த்தவில்லை என்று இலங்கை ராணுவம் மறுப்பு  தெரிவித்துள்ளது. விடுதலை புலிகளுக்கு எதிரான போரின்போது, ரசாயன மற்றும் கிளஸ்டர் ரக குண்டுகளை இலங்கை ராணுவம் பயன்படுத்தியதாக அப் பகுதி யில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அமெரிக்கப் பிரதிநிதி ஸ்டூபன் ஜே. ராப்பிடம் கிறிஸ்தவ பாதிரியார்  ராயப்பூ ஜோசப் குற்றச்சாட்டுகள் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  இதுகுறித்து கொழும்புவில் ராணுவ செய்தித்  தொடர்பாளர் பிரிகேடியர் ரூவன் வணிக சூரியா நிருபர்களிடம் கூறியதாவது: 

25 ஆண்டுகளாக தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் இலங்கை ராணுவம் ஈடுபட்டது. அந்த நேரத்தில் ஒரு முறை கூட சட்ட விரோதமான ஆயுதங்களை  இலங்கை ராணுவம் பயன்படுத்தியது கிடையாது. இலங்கை ராணுவம் மீது தெரிவிக்கப்பட்டுள்ள இந்த குற்றச்சாட்டு ஆ தாரமற்றது. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக சர்வதேச சமுதாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.

வசக்குப் பகுதியில் ராணுவத்தின் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டும் தவறானதாகும். தற்போது பொதுமக்கள் அமைதியாக வாழ்வதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வடக்குப் பகுதியில் உள்ள ராணுவச் சோதனை சாவடிகளின்  எண்ணிக்கை குறைக்கப்பட்டிருக்கிறது என்றார்.              

   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்