5-வது ஒரு நாள்: நியூசி., 87 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

வெள்ளிக்கிழமை, 31 ஜனவரி 2014      விளையாட்டு
Image Unavailable

 

வெலிங்டன், பிப். 1 - இந்திய அணிக்கு எதிராக வெலிங்டன் நகரில் நடைபெற்ற 5_வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியிலும் நியூசிலாந்து  அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண் ட இந்தத் தொடரை 4_0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. 3_வது போட்டி டிராவில் முடிந்தது. 

இந்தப் போட்டியில் ஆறுதல் வெற்றிக்காக இந்திய அணி முயற்சி செய்தது. ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது. வழக்கம் போல பேட்ஸ்மேன்களும், பௌலர்களும் ஏமாற்றத்தை அளித்தனர். 

நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான 5_வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி வெலிங்டன் நகரில் நேற்று பகலிரவு ஆட்டமாக நடந்தது. 

இந்தப் போட்டியில் முதலில் களம் இறங்கிய நியூசிலாந்து அணி அபாரமாக ஆடி ரன்னைக் குவித்தது. இறுதியில் அந்த அணி 50 ஓவரில் 303 ரன்னைக் குவித்தது. 

நியூசிலாந்து அணி தரப்பில், டெய்லர் மற்றும் வில்லியம்சன் இருவரும் அதிரடியாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். டெய்லர் சதம் (102)அடித்தார். வில்லியம்சன் 88 ரன் எடுத்தார். 

இந்திய அணி 304 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற கடின இலக்கை நியூசிலாந்து அணி வைத்தது. ஆனால் அடுத்து களம் இறங்கிய அந்த அணி 49.4 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 216 ரன்னில் ஆட்டம் இழந்தது. 

இந்திய அணி தரப்பில் விராட் கோக்லி மற்றும் கேப்டன் தோனி இருவர் மட்டும் தாக்குப் பிடித்து ஆடினர். மற்ற வீரர்கள் குறைந்த ரன்னில் ஆட்டம் இழந்தனர். கோக்லி 82 ரன்னும், கேப்டன் தோனி 47 ரன்னும் எடுத்தனர். 

நியூசிலாந்து அணி முன்னதாக முதல் 2 ஆட்டத்தில் தொடர்ந்து வெற்றி பெற்றது. 3_வது போட்டி டிரா ஆனது. பின்பு நடந்த 4_வது மற்றும் 5_வது போட்டியிலும் வென்றது. 

இந்தத் தொடரில் இந்திய அணி மோசமாக ஆடியதால் ஒரு நாள் போட்டிக்கான தரவரிசையில் நம்பர் _ 1 இடத்தை இழந்தது. 2_ம் இடத்திற்கு தள்ளப்பட்டது. 

இந்திய அணி சமீபத்தில் தென் ஆப்பிரிக்க பயணத்தில் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடரை இழந்தது. தற்போது நியூசிலாந்தில் ஒரு நாள் தொடரை இழந்துள்ளது. 

Sathu Maavu | Health mix | BABY FOOD for 7 Months old | குழந்தைகளுக்கு சத்து மாவு

KFC Style Fried Chicken Recipe in Tamil | KFC Style Fried Chicken at Home | English Subtitles

Apple Halwa Recipe in Tamil | ஆப்பிள் அல்வா | Halwa Recipe in Tamil | Sweet Recipe

Star Hotel Tandoori Chicken Recipe in Tamil | தந்தூரி சிக்கன் | Chicken Recipe

Paruppu Payasam Recipe in Tamil | பாசி பருப்பு பாயாசம் | Moong Dal Payasam Recipe| Sweet Recipe

இதை ஷேர் செய்திடுங்கள்: