பிலிப்பின்ஸில் 40 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

Image Unavailable

 

மணிலா, பிப்.1 - பிலிப்பின்ஸ் நாட்டில் புதிய அமைதி உடன்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்துவரும் தீவிரவாதிகளின் பிடியில் இருந்த கிராமத்தை 2 நாள் சண்டைக்குப் பிறகு ராணுவம் கைப்பற்றியது. இதில் சுமார் 40 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக அரசு நேற்று அறிவித்தது.

இதுகுறித்து அதிபர் பெனிக்னோ அகினோ கூறுகையில், “தெற்கு மகுந்தனாவ் மாகாணத்தில், பொதுமக்களை பாதுகாப்பதற்காக பேங்சமோரோ இஸ்லாமிய விடுதலை இயக்கத்தினர் மீது ராணுவம் தாக்குதல் நடத்தியது” என்றார்.

பிலிப்பின்ஸ் அரசுக்கும் மிகப் பெரிய போராட்டக் குழுவான மோரோ இஸ்லாமிய விடுதலை முன்னணிக் கும் இடையே மலேசியாவில் கடந்த வார இறுதியில் அமைதி உடன் பாடு ஏற்பட்டது. ஆனால் தனி நாடு வழங்கப்படாததால் இந்த உடன்பாட்டை ஏற்க முடியாது என சிறிய அளவிலான 4 குழுக் கள் அறிவித்துள்ளன. இதில் ராணு வத்தின் தாக்குதலுக்கு இலக்கான பேங்சமோரோ இஸ்லாமிய விடுதலை இயக்கமும் ஒன்று.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ