ஈராக்கில் தற்கொலை தாக்குதல் : 24 பேர் பலி

Image Unavailable

 

பாக்தாத்,பிப்.1 - ஈராக்கில் தீவிரவாதிகள் தற்கொலை தாக்குதல் நடத்தியதில் 24 பேர் பலியானார்கள் மற்றும் பலர் படுகாயம் அடைந்தனர். 

ஈராக் நாட்டில் சதாம் உசேன் தூக்கிலிடப்பட்ட பின்னர் அந்த நாட்டில் தீவிரவாதிகளின் தாக்குதலால் ஆயிரக்கணக்கானோர் பலியாகி உள்ளனர். நேற்று முன்தினம் 6 தீவிரவாதிகள் ஒன்று சேர்ந்து தலைநகர் பாக்தாத்தில் உள்ள போக்குவரத்து அமைச்சக அலுவலகத்திற்குள் நுழைந்து அதிரடியாக தற்கொலை தாக்குதலை நடத்தினர். இந்த தாக்குதலில் 24 பேர் பலியானார்கள் மற்றும் பலர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பெற்றுவருபவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிகிறது. தீவிரவாதிகள் தாங்கள் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்ததில் 24 பேர் உயிரிழந்ததோடு அமைச்சக கட்டிடமும் இடிந்து விழுந்தது. மேலும் அலுவலகத்திற்கு வந்திருந்த 8 பேர்களையும் பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர். இந்த தாக்குலுக்கு இதுவரை எந்த தீவிரவாத இயக்கமும் பொறுப்பு ஏற்கவில்லை. ஆனால் இந்த தாக்குதலை சன்னி பிரிவு தீவிரவாத இயக்கம் நடத்திருக்கலாம் போலீசார் சந்தேகிக்கின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ

இன்றைய தலைப்புச் செய்திகள் | Today's News Headlines 26.10.2021 காற்று மணியின் ஓசைகளை கேட்டு குஷியான நாய்...! முதலையை தோளில் போட்டு குத்தாட்டம் | சிலிர்க்க வைக்கும் வீடியோ வைரல்...!
பார்வையாளர்ளை வியப்பில் ஆழ்த்திய பாம்பு நடனம்...! ஆமையின் கண்ணீரை பருகும் வண்ணத்துப்பூச்சிகள்...! ஒரே நாளில் தலையில் உள்ள பேனை விரட்ட எளிய டிப்ஸ்| How To Get Rid Of Head Lice Completely,
நெற்றியில் ஒற்றை கண்ணுடன் பிறந்த ஆட்டுக்குட்டி...! இன்றைய தலைப்புச் செய்திகள் | Today's News Headlines 25.10.2021 இன்றைய தலைப்புச் செய்திகள் | Today's News Headlines 24.10.2021
ஹோம் வொர்க் பண்ணினா பூனைக்கு பிடிக்காது சிறுவனை டிஸ்டர்ப் செய்யும் வீடியோ வைரல்....! கீழே கிடக்கும் குப்பையை எடுத்து குப்பை தொட்டியில் போடும் யானை... Vaara Rasi Palan - 25.10.2021 to 31.10.2021 | Weekly rasi palan Tamil | வார ராசிபலன்