வயது வரம்பை நீக்க தா.பாண்டியன் வலியுறுத்தல்

வியாழக்கிழமை, 24 பெப்ரவரி 2011      அரசியல்
Tha Pandiayan

 

சென்னை, பிப்.24 - முற்பட்ட வகுப்பினருக்கு அரசு பணியில் சேருவதற்கு வயது வரம்பை நீக்கி, போராடி வருகின்ற மருந்தாளுநர்களின் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என தா.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அரசுப்பணியில் சேர்வதற்கான வயது வரம்பை நீக்கி தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும்பிற்படுத்தப்பட்டோருக்கு வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் தமிழக அரசு வேலை வழங்கியுள்ளது.

ஆசிரியப்பணி, பலநோக்கு சுகாதாரப்பணியார்கள் பணி நியமனத்தில் முற்பட்ட வகுப்பினருக்கான வயது வரம்பையும் nullநீக்கி தமிழக அரசு பணிநியமானம் செய்துள்ளது. இந்நிலையில், மருத்தாளுநர் பயிற்சி முடித்த முற்பட்ட வகுப்பினருக்கு வயது வரம்பை nullநீக்காததால் 500க்கும் மேற்பட்ட மருந்தாளுநர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, முற்பட்ட வகுப்பைச் சேர்ந்த மருத்தாளுநர்களுக்கும் வயது வரம்பை நீக்கி பணி நியமனம் வழங்க வேண்டுமென பாதிக்கப்பட்டவர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை, சென்னை கீழ்பாக்கம் மருத்துவக் கல்வி இயக்குநரகத்தில் நடத்தி வருகின்றனர். போராடும் மருத்தாளுநர்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு அவர்களுக்கு அரசுப் பணி வழங்க வேண்டுமென இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் தா.பாண்டியன் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: