பணிப்பெண்ணால் குழந்தை கொலை: இந்திய தம்பதி கைது

Image Unavailable

 

நியூயார்க், பிப்.2 - அமெரிக்காவில் பணிப்பெண்ணால் குழந்தை கொல்லப்பட்ட விவகாரத்தில் இந்திய தம்பதியை அமெரிக்க போலீஸார் கைது செய்துள்ளனர். 

அமெரிக்காவின் கனெக்டிக்கட் மாகாணத்தில் நியூஹெவன் பகுதியில், இந்திய தம்பதி மணி சிவகுமார் (33), தேன்மொழி (24) தம்பதியினர் வசிக்கின்றனர். இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஆதியன் சிவகுமார் என்ற குழந்தை இருந்தது. அங்குள்ள தனியார் நிறுவனத்தில் மணி சிவகுமார் வேலை பார்க்கிறார். இவர்களது குழந்தையை கவனித்து கொள்ள இந்தியாவில் இருந்து கிஞ்சால் படேல் (27) என்ற பெண்னை பணியில் அமர்த்தினர்.  கடந்த ஜனவரி 16-ம் தேதி வீட்டில் கிஞ்சால் படேல் பணிகளை கவனித்துக் கொண்டிருந்தார். அப்போது குழந்தை ஆதியன் சிவகுமார் தொடர்ந்து அழுது தொந்தரவு கொடுத்தான். இதனால் ஆத்திரம் அடைந்த கிஞ்சால் படேல் குழந்தையை பிடித்து உலுக்கியும், தாறுமாறாக அடித்தும் தரையில் தூக்கி வீசி அடித்துள்ளார். இதுபோல்  3  முறை செய்துள்ளார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த குழந்தை ரத்த வெள்ளத்தில் அழுதபடி வலியால் துடித்தான். உடனே குழந்தையின் தந்தை மணிக்கு கிஞ்சால் படேல் போனில் தகவல் தெரிவித்தார். அதிர்ச்சி அடைந்த மணி, வீட்டுக்கு விரைந்து வந்தார். குழந்தையை அவசர அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு குழந்தை ஆதியனை பரிசோதித்த டாக்டர், தலையில்  மண்டை ஓட்டில் படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தனா நிலையில் இருப்பதாக தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தனர். அங்கு அறுவை சிகிச்சை செய்தும் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இதுகுறித்து போலீஸார் கிஞ்சால் படேலிடம் விசாரணை நடத்தி கொலை வழக்கு பதிந்து, கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தில் குழந்தை உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த போதும் போலீஸாருக்கு தெரிவிக்காமல் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற இந்திய தம்பதி தேன்மொழி மற்றும் மணி சிவகுமாரையும் போலீஸார் கைது செய்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ