முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியா - நியூசி., மோதும் முதல் டெஸ்ட் 6-ம் தேதி துவக்கம்

சனிக்கிழமை, 1 பெப்ரவரி 2014      விளையாட்டு
Image Unavailable

 

ஆக்லாந்து, பிப். 2 - இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வரும் 6_ம் தேதி ஆக்லாந்தில் துவங்க இருக்கிறது. 

கேப்டன் தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கேப்ன் பிரண்டன் மெக்குல்லம் தலைமையிலான அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. 

முன்னதாக இந்தத் தொடரில் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் போட்டி நடந்தது. இதில் இந்திய அணி 0 _ 4 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. 3_வது போட்டி டிரா ஆனது. 

இந்த ஒரு நாள் தொடர் துவங்குவதற்கு முன்பு இந்திய அணி ஐ.சி.சி.யின் தர வரிசைப் பட்டியலில் முதலிடத்தில் இருந்தது. தொடர் தோல்வியால் இந்திய அணி 2_ம் இடத்திற்கு தள்ளப்பட்டது. 

நியூசிலாந்திற்கு எதிரான ஒரு நாள் தொடரில் ஒயிட் வாஷ் ஆனதால் தோனி தலைமையிலான இந்திய அணியினர் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளனர். 

இந்நிலையில் ஒரு நாள் போட்டி தொடரை தொடர்ந்து இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் மோத உள்ளது. 

இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வரும் 6 _ம் தேதி ஆக்லாந்தில் துவங்குகிறது. அதிகாலை 3.30 மணிக்கு துவங்கும் இந்தப் போட்டியை சோனி சிக்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. 

இதனைத் தொடர்ந்து 2_வது டெஸ்ட் போட்டி வெலிங்டன் நகரில் 14 _ம் தேதி துவங்குகிறது. டெஸ்ட் தொடருக்கு முன்னதாக நியூசிலாந்து லெவன் அணிக்கு எதிராக இந்திய அணி 2 நாள் பயிற்சி ஆட்டம் ஒன்றில் மோதுகிறது. இந்த ஆட்டம் இன்று வாங்கரி நகரில் நடக்கிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago